Friday, June 15, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

சாதி விந்து !நான் உயர்ந்தவன்,
நீ தாழ்ந்தவன் என்ற போராட்டம்
ஒரு புறம் நடந்து கொண்டிருக்க,
குழந்தை இல்லாதவருக்காக,

டெஸ்ட் டியூபில் சங்கமித்து
முத்தமிட வந்த
தாழ்ந்த சாதி விந்தை
உயர்சாதி கருமுட்டை
அன்பு மாறாமல்
ஏற்றுக் கொண்டது !

சாதிவேறுபாடுகள்
விந்திற்கோ, கருமுட்டைக்கோ
இல்லை !

அவை கூமுட்டைகளுக்கு மட்டுமே !

22 : கருத்துக்கள்:

said...

அட்ரா சக்கை அட்ரா சக்கைஅட்ரா சக்கை அட்ரா சக்கைஅட்ரா சக்கை அட்ரா சக்கைஅட்ரா சக்கை அட்ரா சக்கைஅட்ரா சக்கை அட்ரா சக்கைஅட்ரா சக்கை அட்ரா சக்கைஅட்ரா சக்கை அட்ரா சக்கைஅட்ரா சக்கை அட்ரா சக்கைஅட்ரா சக்கை அட்ரா சக்கைஅட்ரா சக்கை அட்ரா சக்கைஅட்ரா சக்கை அட்ரா சக்கைஅட்ரா சக்கை அட்ரா சக்கைஅட்ரா சக்கை அட்ரா சக்கைஅட்ரா சக்கை அட்ரா சக்கைஅட்ரா சக்கை அட்ரா சக்கைஅட்ரா சக்கை அட்ரா சக்கைஅட்ரா சக்கை அட்ரா சக்கை

said...

கருத்து சூப்பர்

ஆனா, ஏதாச்சும் கவிதை எழுதிருப்பீங்கன்னு வந்தேன், கவுஜையாக்கிட்டீங்களே..!

said...

டெஸ்ட் டியூப் ல மட்டும் இல்லங்க நேரடியாவே ஏத்துக்கும்

said...

சாதி வேறுபாடை வைத்து, விடாமல் ஜல்லி அடிக்கும் அத்தனை கூமுட்டைகளுக்கும்
இக்கவிதை சமர்ப்பணம்!


தாழ்தவன்= தாழ்ந்தவன் [எ.பி.]

said...

//சாதிவேறுபாடுகள்
விந்திற்கோ, கருமுட்டைக்கோ
இல்லை!

அவை கூமுட்டைகளுக்கு மட்டுமே!//
சுடும் வரிகள்.

எந்த வித நூதன தகுதியும் பெரிய திறமையும் அற்ற சில வகுப்பினர் தம்மை உயர்த்திக்கொள்ள சமுதாயத்தில் தமக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள உருவான சதித்திட்டமே இந்த சாதி திட்டம். மற்றபடி, எல்லாம் ஒரு சோடிப்பே.

said...

வணக்கம்ணா , எதோ கவித படிக்கலாம்னு வந்தேன், ஆனா அதிரடி புரட்சிக்கட்டுரை போட்டு இருக்கிங்க,நமக்கும் புரட்சினா ரொம்ப புடிக்கும்ணா, அது வேற விஷயம் , விவேக் போல வரியை ஒண்ணு கீழ ஒண்ணா பிச்சுப்போட்ட கவிதைனு எழுதி இருந்திங்கண்ணா , நான் சொல்றதுக்கு எதும் இல்லைங்கண்ணா!

மத்தபடி உங்க புரட்சிகருத்துகளுக்கு வணக்கம் தோழா!

said...

//சாதிவேறுபாடுகள்
விந்திற்கோ, கருமுட்டைக்கோ
இல்லை !

அவை கூமுட்டைகளுக்கு மட்டுமே !
//

Superb! Excellent Lines~!

said...

//Thamizh said...
டெஸ்ட் டியூப் ல மட்டும் இல்லங்க நேரடியாவே ஏத்துக்கும்
//

அது.....!

அஜித் ஸ்டையிலில் படிக்கவும் !
:))

said...

//மகேந்திரன்.பெ said...
அட்ரா சக்கை அட்ரா சக்கைஅட்ரா சக்கை அட்ரா
//

யோவ் !

வாய்யா !
சாதி விந்து என்றால் எல்லா சாதி விந்தும் தான் !
:))

முதல் போனிக்கு நன்றி !

said...

//வாசகன் said...
கருத்து சூப்பர்

ஆனா, ஏதாச்சும் கவிதை எழுதிருப்பீங்கன்னு வந்தேன், கவுஜையாக்கிட்டீங்களே..!
//

கவிஜைதான் எழுதவருது...!
சில சமயம் 1 அல்லது 2 தேறுது.
வடிவமா முக்கியம் ? கருத்துதானே ?
கொஞ்சம் பெரிய மனசை ஓப்பன் பண்ணுங்க !
:)

said...

//VSK said...
சாதி வேறுபாடை வைத்து, விடாமல் ஜல்லி அடிக்கும் அத்தனை கூமுட்டைகளுக்கும்
இக்கவிதை சமர்ப்பணம்!


தாழ்தவன்= தாழ்ந்தவன் [எ.பி.]
//

எஸ்கே ஐயா,

இதுக்கு வேறு எதாவாது விளக்கம் இருக்கிறதா ? வேறுபாடு இருக்கும் வரை ஜல்லிகள் இருப்பதுதானே ஞாயம் !

எழுத்துப்பிழைகள் போல் தலையெழுத்துப் பிழையென பிறரைப் பார்த்து நக்கலடிப்பவர்களையும் திருத்த முனையவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
:)

said...

மாசிலா said...

சுடும் வரிகள்.

எந்த வித நூதன தகுதியும் பெரிய திறமையும் அற்ற சில வகுப்பினர் தம்மை உயர்த்திக்கொள்ள சமுதாயத்தில் தமக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள உருவான சதித்திட்டமே இந்த சாதி திட்டம். மற்றபடி, எல்லாம் ஒரு சோடிப்பே.
//

சுடும் வரிகள் சொன்னாலும் கூமுட்டைகள் பொறிந்து சிறகடிக்கப் போவதில்லை.

நடுநிலை பேசுவது நல்லது ! ஓரளவுக்காகவது என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டு பேசுவது நலம் என்பதற்காக சிலவற்றை சுட்டிக் காட்டுகிறேன்.

அன்று சதிக்கு சப்பைக் கட்டியவர்களே, இன்று சாதி என்பது பிறந்தோம் என்பதற்காக ஏற்றுக் கொள்ளலாம் என்று நான்காம் தர காரணத்தால் அது அப்படியே இருப்பது சரி என்பது போல் பேசுகிறார்கள்.

குணப்படுத்த முடியாமல் சீழ்பிடித்தகாலுடன் நடக்கலாம், ஏனென்றால் காலுடன் இருந்தால் தான் அவன் மனிதன் என்ற பெருமை படமுடியும் என்ற பொருளில் சீழ்பிடித்த காலை வெட்டிவிடுவது தவறு என்பது சிலரின் வாதம்.

:))))

said...

எல்லா விந்தும் எல்லா முட்டையும் சேரும் என்ற உங்கள் வாதம் ஏற்றுக் கொள்ள முடியாது கண்ணன்.

தெரியாமலா வேதம், வருணம், மனு எல்லாம் எழுதி இருக்கு.

சரி, உங்கள் வாதத்துக்கே நான் வருகிறேன். நாயின் விந்தைக்கூட கழுதையின் முட்டைக்குள் அனுப்பலாம். ஆனால் இறைவனின் கட்டளைப்படி இது தருமம் இல்லை. நியாயம் இல்லை.

said...

//சரி, உங்கள் வாதத்துக்கே நான் வருகிறேன். நாயின் விந்தைக்கூட கழுதையின் முட்டைக்குள் அனுப்பலாம். ஆனால் இறைவனின் கட்டளைப்படி இது தருமம் இல்லை. நியாயம் இல்லை//

அசட்டுக் கோமை, சதுர்வேதி,

ஏன் தருமம் இல்லை;இறைவன் இப்படி இசகு பிசகா,செய்ததால் தான் ,ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட கும்பலே தமிழ்நாட்டில் வந்தது.வேறு எப்படியாம்?சொல்லுங்க.

said...

ஒரு கிருமி,

எப்போதும் கிரிமி கிரிமின்னு எல்லா பதிவுகளிலும் நோய்பரப்பது. நான் இப்பொழுதெல்லாம ரிஜெக்ட் பண்ணிவிடுகிறேன்.

இன்றும் ஒரு பின்னூட்டம் வந்தது ரிஜெக்டட்.

கிருமியின் முயற்சி வீன்... நேரவிரயம்

said...

/////சாதிவேறுபாடுகள்
விந்திற்கோ, கருமுட்டைக்கோ
இல்லை !////

அட அட அடா!

இதெல்லாம், அதா வரதுதான் இல்ல?
எப்டியாவ்து ஒரு கவுஜ எள்தலாம்னு பாக்கரேன். வர மாட்டேங்குதே....;

said...

//சாதிவேறுபாடுகள்
விந்திற்கோ, கருமுட்டைக்கோ
இல்லை !

அவை கூமுட்டைகளுக்கு மட்டுமே !//

இது கவிதையின் படிமங்களை உள்ளடக்கியதா? இல்லையா? யாருக்கு வேணும். தேவையே இல்லை.

முகத்திலறையும் இந்த வரிகள் போதும். இன்னும் நூறு முறை உரக்கச் சொல்ல வேண்டும் இதை.

said...

"டைரக்டு அட்டாக்குக்கும் இந்த வேறுபாடு இல்ல.

நல்லா இலுக்கு.

said...

// bala said...
அசட்டுக் கோமை, சதுர்வேதி,

ஏன் தருமம் இல்லை;இறைவன் இப்படி இசகு பிசகா,செய்ததால் தான் ,ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட கும்பலே தமிழ்நாட்டில் வந்தது.வேறு எப்படியாம்?சொல்லுங்க. //

பாலா சதுர்வேதி உங்க ஆளு இல்லையா ? போட்டு தாக்குறிங்க ?

ஓபிசி கிரிமி எடுத்துக் கொண்டு வரும் நோயாளி நீங்க இல்லை என்று நினைப்பதால் இந்த பின்னூட்டம் அனுமதிக்கப்பட்டது !
:)

திராவிடன் இல்லை ஆரியன் இல்லை...ஆரிய பவன்களில் சூடான மசால் தோசை மட்டும் கிடைக்கிறது.

:))

said...

//வவ்வால் said...
வணக்கம்ணா , எதோ கவித படிக்கலாம்னு வந்தேன், ஆனா அதிரடி புரட்சிக்கட்டுரை போட்டு இருக்கிங்க,நமக்கும் புரட்சினா ரொம்ப புடிக்கும்ணா, அது வேற விஷயம் , விவேக் போல வரியை ஒண்ணு கீழ ஒண்ணா பிச்சுப்போட்ட கவிதைனு எழுதி இருந்திங்கண்ணா , நான் சொல்றதுக்கு எதும் இல்லைங்கண்ணா!

மத்தபடி உங்க புரட்சிகருத்துகளுக்கு வணக்கம் தோழா!//

வவ்வால் அவர்களே,

புதுக்கவிஜைக்கு பொருள் தான் தேவை என ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்.

பாராட்டுக்கு நன்றி. மீண்டும் பறந்து வருக

said...

//நாமக்கல் சிபி said...

Superb! Excellent Lines~! //

அப்பறம் என்ன ? பித்தாநந்தாவே ஆசிர்வாதம் பண்ணிட்டார்.
வேறு என்ன வேண்டும் ?

நன்றி !

said...

//சதுர்வேதி said...
எல்லா விந்தும் எல்லா முட்டையும் சேரும் என்ற உங்கள் வாதம் ஏற்றுக் கொள்ள முடியாது கண்ணன்.

தெரியாமலா வேதம், வருணம், மனு எல்லாம் எழுதி இருக்கு.

சரி, உங்கள் வாதத்துக்கே நான் வருகிறேன். நாயின் விந்தைக்கூட கழுதையின் முட்டைக்குள் அனுப்பலாம். ஆனால் இறைவனின் கட்டளைப்படி இது தருமம் இல்லை. நியாயம் இல்லை. //

சதுர்வேதி சார்,

உங்கள் கருத்துக்களைப் படித்து உங்களை ச'துர்'வேதிங்கிறாங்களே ?
எனக்கு ஞாயமாகப் படலை..

உங்கள் புரட்சிகருத்துக்களை தொடர்ந்து பரப்புங்கள். இல்லையென்றால் போரடிக்கும்.

:))

(கோவிச்சிக்க மாட்டிங்க தானே ?)