Monday, April 09, 2012

தமிழ்மணம் கருவிபட்டை

கருவி பட்டை இல்லாமல் வாக்குப் போடுவது எப்படி ?

எந்த தொழில் நுட்பத்தையும் குறுக்குவழியில் வளைத்து சாதித்துக் கொள்வதாக நினைக்கும் கூட்டம் உண்டு, அது இங்கு தமிழ் மணம் திரட்டியில் இணைக்கும் பதிவுகளிலும் குழுவாக தொடர்ந்து நடந்துவருகிறது. 

குறிப்பிட்ட பதிவில் தமிழ்மணம் கருவிப்பட்டை இருக்காது ஆனால் மிகுதியான வாக்குகள் விழுந்துள்ளதாக 'வாசகர் பரிந்துரை' பகுதியில் காட்டும், அந்த குறிப்பிட்ட பதிவினுள் நுழைந்து தேடினால் நமக்கு தமிழ்மணம் கருவி பட்டை தென்படாது, நம்மால் எதிர்த்து வாக்களிக்கவோ முடியாது. குறிப்பாக எதிர்வாக்குகளை தடுத்து 'மகுடம் சூட்டிக் கொள்ள' தந்திரம் செய்பவர்களின் 'சிறு மூளையின்' வேலை தான் இது.

இந்த குறுக்கு வழியை எப்படி கையாள்கிறார்கள் என்று பார்ப்போம்.

  • தமிழ் மணத்தில் ஏற்கனவே இணைந்துள்ளப் பதிவர்கள் வாக்களிக்கும் அல்லது பதிவுகளை தமிழ்மணத்தில் அளிக்கும் 'தமிழ் மண கருவிப்பட்டை வைத்திருப்பார்கள். கருவிப்பட்டை இருந்தால் நேரடியாக அதில் அழுத்தி தமிழ்மணத்தில் சேர்க்க முடியும். கூடவே ஆதரவு எதிர்ப்பு வாக்குகளுக்கான 'கை'கள் அங்கிருக்கும்.
  • குறுக்குவழியாளர்கள் இந்த கருவிப்பட்டையை தங்களது பதிவு டெம்ளேட்டில் இருந்து நீக்கிவிடுவார்கள். அதன் பிறகு எழுதிய பதிவை நேரடியாக தமிழ்மணத்தில் 'இடுகைகளை புதுப்பிக்க' என்னும் இடத்தில் சுட்டியாக (URL) கொடுத்து இணைத்துவிடுவார்கள்.
  • தமிழ் மணத்தில் இணைத்த பதிவுகள் ஒவ்வொன்றிற்கும் தமிழ்மணம் தனித் தனி பதிவு எண் ஒன்றை கொடுக்கும். பதிவை தமிழ்மணத்தில் சேர்த்த பிறகு தமிழ்மண முகப்பில் அந்த பதிவின் மீது மவுசை ஓட்டினால் தமிழ்மணத்தில் அந்த இடுகையின் பதிவெண் கிடைக்கும். (மேலே படம் பார்க்க) அதை எடுத்து வாக்களிக்கும் சுட்டியாக மாற்றிக் கொள்வதன் மூலம் வாக்குகளை கருவிப்பட்டை இல்லாமல் அளிக்க முடியும். இவ்வாறு உருவாக்கப்படும் சுட்டிகளை நண்பர்களுக்கு மின் அஞ்சல் / சாட் / குழும அஞ்சல் வழியாக அனுப்பி 'என்னுடை பதிவுக்கு ஓட்டு போட்டுவிடுங்கள்' என்று வேண்டுகோள் வைப்பார்கள். 
இப்போது ஒரு உதாரணம் பார்ப்போம்,

உண்மையை நோக்கி ஒரு பயணம்... - அன்னு என்பவர் ஒருவரின் பதிவில் தமிழ்மணம் கருவிப்பட்டை இல்லை, ஆனாலும் அந்தப் பதிவு வாசகர் பரிந்துரைப் பகுதியில் 12 வாக்குகள் பெற்றதாகக் காட்டுகிறது. இவருடைய அந்தப் பதிவிற்கு தமிழ்மணம் கொடுத்திருக்கும் பதிவு எண் : 1154152. அவருக்கு நேர் அல்லது எதிர் வாக்குகளை நீங்கள் செலுத்த விரும்பினால் 

http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1154152
http://tamilmanam.net/rpostrating.php?s=N&i=1154152

பின்குறிப்பு : நான் அவருக்கு(அன்னுவுக்கு) ஆதரவாக / எதிராக வாக்களிக்கச் சொல்லி சுட்டிக் கொடுக்கவில்லை, உதாரணத்திற்குக் காட்டியுள்ளேன், தவிர அன்னு என்பவர் இப்படித்தான் செய்துள்ளாரா வேற வழி வைத்திருக்கிறாரா என்றும் எனக்கு தெரியாது. நட்சத்திர வாரத்தில் இது போன்றப் பதிவுகளை காலம் பதிவில் எழுத வேண்டாம் என்பதால் இதில் எழுதுகிறேன், இது நட்சத்திரப் பதிவும் அல்ல. ஒரு விழிப்புணர்வு பதிவு மட்டுமே. எதிர்வாக்குகள் முடக்கப்பட்ட பதிவுகளில் நீங்களே அந்தப் பதிவுகளின் தமிழ்மணப் பதிவு எண்ணை (மேற்கண்டவாறு) சுட்டியாக அமைத்து உலவியின் முகவரியில்  செலுத்தி வாக்களிக்க முடியும்.

12 : கருத்துக்கள்:

said...

அரசியல்வாதிகளை மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கே.

said...

இப்படி கூட செய்யலாமா? இதுனால என்ன பயன்....

said...

அந்த பதிவுக்கு மைனஸ் ஓட்டு போட்டுவிட்டேன் உங்க இந்த பதிவுக்கு நான் ஓட்டு எப்படி போடுறது..ஹிஹி!

said...

//இப்படி கூட செய்யலாமா? இதுனால என்ன பயன்....// எதிர்வாக்குகள் இருந்தால் மகுடம் ஏற தடையாக இருக்கும் 15 எதிர்வாக்கு, 15 ஆதரவு வாக்கு மகுடத்திற்கு இட்டுச் செல்லாது. வெறும் 15 ஆதரவு வாக்கு இருந்தால் மகுடம் சூடலாம். வேறென்ன பயன் என்று எனக்கு தெரியவில்லை.

said...

இப்படியெல்லாம் கூடவா நடக்குது

ச்சே....

கள்ள ஓட்டு விஷயத்தில் அரசியல்வாதிகளை எல்லாம் இவர்கள் மிஞ்சி விடுவார்கள் போலிருக்கிறதே

said...

கோவியாரே, இப்ப தான் அந்த பதிவை பார்த்தேன். சார்வாகன் கூட இதைப் பற்றி கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆனால் இவங்களுக்கு தான் எதிர் கேள்வியே பிடிக்காதே அதனாலே சார்வாகன் பின்னோட்டத்தையே தூக்கிட்டாங்க.
பதிவு எழுதி உண்மையா ஓட்டு வாங்கி மேலே வர முடியல இவங்க உண்மையை நோக்கி பயணம் போறாங்கலாம் நல்ல காமடி :)))

said...

கோவி,

நல்லா எளிமையாக சொன்னிங்க, அப்புறம் இதையே சுட்டியாக்கி என்பதிவைப்படிங்கனு சுட்டிக்கொடுப்பாங்க,சரிப்படிக்கலாம்னு சுட்டிய அழுத்தினா அவங்களுக்கு ஓட்டு விழுது, அந்த தில்லு முல்லையும் சொல்லுங்க.

தடுக்க வழி இல்லையா? ஏன் இன்னும் தமிழ்மண நிர்வாகிகள் இதைக்கண்டுக்கொள்ளவில்லை.

said...

//வவ்வால் said...
கோவி,

நல்லா எளிமையாக சொன்னிங்க, அப்புறம் இதையே சுட்டியாக்கி என்பதிவைப்படிங்கனு சுட்டிக்கொடுப்பாங்க,சரிப்படிக்கலாம்னு சுட்டிய அழுத்தினா அவங்களுக்கு ஓட்டு விழுது, அந்த தில்லு முல்லையும் சொல்லுங்க.

தடுக்க வழி இல்லையா? ஏன் இன்னும் தமிழ்மண நிர்வாகிகள் இதைக்கண்டுக்கொள்ளவில்லை.//

தடுக்க வழியா ? ஏற்கனவே தொடர்ந்து அவர்களே மகுடம் சூட்டிக் கொண்டது அனைவருக்கும் தெரிந்தது தானே என்று விட்டுவிட்டனர், ஊருமுழுவதும் போஸ்டர் ஒட்டி முகம் காட்டுபவர்களை எவராவது பெருமைக் குரியவராக நினைப்பார்களா ? யாரும் பார்க்கவில்லை என்றால் புகைப்படத்தில் பொதுமக்கள் உமிழ்ந்துவிட்டு செல்வார்கள் இல்லையா ?

தங்களுக்கான சொந்த செலவில் சூனியம் என்பது தெரியாமல் மகுடம் சூட்டிக் கொள்கிறார்கள் என்பது பரிதாபத்துகுரியது என்று திரட்டி விட்டிருக்கக் கூடும்.

said...

நன்றி.நண்பரே.எங்கள் தொழில்நுட்ப குழுவுடன் இணைந்து இந்த பதிவை நாங்கள் எழுத இருந்தோம்.தாங்கள் முந்திவிடீர்கள்.
நல்லதை யார் சொன்னால் என்ன?உரத்து சொல்வோம்.

ஒத்தகைல படமா போட்டு அதன் உள் லிங்க் கொடுத்து
செய்கிறார்களே அதையும் எழுதவும்.

said...

இன்னும் இருக்கு ஆதாரத்துடன் இவர்களின் முகத்திரையை
கிழிப்போம்.காத்திருங்கள்.

said...

இப்படி வாக்குகள் பெற்று மகுடம் சூடுவதில் என்ன சாதனை இருக்கிறதென்று எனக்குப் புரியவில்லை. விவேக் ஒரு படத்தில் காகித வெயிட்டைத் தூக்கி தன்னை பயில்வானாக காட்டப் பார்ப்பார். இவர்கள் அதுபோல காகித பயில்வான்கள்தான்...

said...

;)