
பூவின் வாசமோ, வண்ணமோ
எதோ ஒரு ஈர்ப்பில்
பார்த்துக் கொண்டு இருந்த
என்னை அழைத்தது அருகில்,
எல்லாப் பூக்களைப் போலத்தான்
இந்த பூவும் நன்றாக இருக்கிறதே
ஒட்டி உறவாடினேன்
அந்த ரோஜாவுடன் !
நெருங்கிப் பழகியதாலோ என்னவோ
உரிமை எடுத்துக் கொண்டு,
என்னிடம் பழகும் நீ
ஏன் காட்டுப்பூக்களிடம்
பழகுகுறாய் என்று கடிந்து
கொண்டது ரோஜா.
பூவெல்லாமே எனக்கு ஒன்றுதான் !
நான் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும்,
என்னைவிட அந்தபூக்கள்
என்ன உயர்வு உனக்கு ?
கடிந்து கொண்டது ரோஜா !
மீண்டும் சொன்னேன்,
பூக்களெல்லாமே பூக்களே
எந்த பூவும் என்னிடம் பேசினால்
நானும் பேசுவேன் !
நீ பூவென்று நினைப்பது பூவல்ல
பூநாகம், நீ தொடர்ந்து
பழகினால், உன் கூடா ஒழுக்கமாக
உன்னை வெறுப்பதைத் தவிர எனக்கு
வழி இல்லை என்று சொன்னதுமின்றி
முட்களால் என்னைத் தீண்டிவிட்டு மவுனமானது !
வருடிக் கொடுக்கும்
என் விரலில் தீண்டினாலும்
இதயத்தில் தீண்டியதாகவே உணர்ந்தேன்.
நீ மட்டும் என்ன ? நீயும் முட்களால் தீண்டி
காட்டு ரோஜாதான் என காட்டிவிட்டாயே !
அன்பு ரோஜாவே,
பூவில் பூநாகம் இருப்பதெல்லாம் எனக்கு
தெரியாது, என்னைப் பொருத்து
அது நாகலிங்கப் பூதான்,
அந்த பூமட்டுமல்ல,
எந்த பூவும் என்னுடன் பழகினால்
நான் பழகுவேன் !
உன்னுடன் மட்டும் பழகி,
நீ சொல்வதை மட்டும் கேட்கவேண்டும் ?
நீ நினைப்பதை என்னால் நிறைவேற்ற முடியாது !
உன்னை புரிந்து கொள்ள முடியவில்லை,
என்னைத் தீண்டியதில் உதிர்ந்துவிட்ட
உன்முட்களால் ஏற்பட்ட காயம்
உனக்கு வலிக்குமே...
அதற்க்காக நானும் கூட வருந்துகிறேன்.
என்றோ ஒருநாள்,
பூந்தோட்டத்தில் எல்லாப்பூக்களுடன்
நீயும் இருக்க வேண்டும்,
அன்று என்னுடன்
மீண்டும் பேசுவாய் என்றே எதிர்பார்த்து இருப்பேன்,
அன்றுவரை உன்மவுனம் எனக்கு
சம்மதமே !
எதோ ஒரு ஈர்ப்பில்
பார்த்துக் கொண்டு இருந்த
என்னை அழைத்தது அருகில்,
எல்லாப் பூக்களைப் போலத்தான்
இந்த பூவும் நன்றாக இருக்கிறதே
ஒட்டி உறவாடினேன்
அந்த ரோஜாவுடன் !
நெருங்கிப் பழகியதாலோ என்னவோ
உரிமை எடுத்துக் கொண்டு,
என்னிடம் பழகும் நீ
ஏன் காட்டுப்பூக்களிடம்
பழகுகுறாய் என்று கடிந்து
கொண்டது ரோஜா.
பூவெல்லாமே எனக்கு ஒன்றுதான் !
நான் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும்,
என்னைவிட அந்தபூக்கள்
என்ன உயர்வு உனக்கு ?
கடிந்து கொண்டது ரோஜா !
மீண்டும் சொன்னேன்,
பூக்களெல்லாமே பூக்களே
எந்த பூவும் என்னிடம் பேசினால்
நானும் பேசுவேன் !
நீ பூவென்று நினைப்பது பூவல்ல
பூநாகம், நீ தொடர்ந்து
பழகினால், உன் கூடா ஒழுக்கமாக
உன்னை வெறுப்பதைத் தவிர எனக்கு
வழி இல்லை என்று சொன்னதுமின்றி
முட்களால் என்னைத் தீண்டிவிட்டு மவுனமானது !
வருடிக் கொடுக்கும்
என் விரலில் தீண்டினாலும்
இதயத்தில் தீண்டியதாகவே உணர்ந்தேன்.
நீ மட்டும் என்ன ? நீயும் முட்களால் தீண்டி
காட்டு ரோஜாதான் என காட்டிவிட்டாயே !
அன்பு ரோஜாவே,
பூவில் பூநாகம் இருப்பதெல்லாம் எனக்கு
தெரியாது, என்னைப் பொருத்து
அது நாகலிங்கப் பூதான்,
அந்த பூமட்டுமல்ல,
எந்த பூவும் என்னுடன் பழகினால்
நான் பழகுவேன் !
உன்னுடன் மட்டும் பழகி,
நீ சொல்வதை மட்டும் கேட்கவேண்டும் ?
நீ நினைப்பதை என்னால் நிறைவேற்ற முடியாது !
உன்னை புரிந்து கொள்ள முடியவில்லை,
என்னைத் தீண்டியதில் உதிர்ந்துவிட்ட
உன்முட்களால் ஏற்பட்ட காயம்
உனக்கு வலிக்குமே...
அதற்க்காக நானும் கூட வருந்துகிறேன்.
என்றோ ஒருநாள்,
பூந்தோட்டத்தில் எல்லாப்பூக்களுடன்
நீயும் இருக்க வேண்டும்,
அன்று என்னுடன்
மீண்டும் பேசுவாய் என்றே எதிர்பார்த்து இருப்பேன்,
அன்றுவரை உன்மவுனம் எனக்கு
சம்மதமே !
15 : கருத்துக்கள்:
நீங்க ரொம்ப கெட்டவர் அண்ணாச்சி.......!!!!!!!!!!!!!!!!!
:))))))))
//என்னுடன்
மீண்டும் பேசுவாய் என்றே எதிர்பார்த்து இருப்பேன்,
அன்றுவரை உன்மவுனம் எனக்கு
சம்மதமே !//
இறுதி வரிகள் நன்று.
அனுபவித்து எழுதியது போல் இருக்கிறது. சொந்த அனுபவமா?
அன்புடன்,
ஜோதிபாரதி.
//TBCD said...
நீங்க ரொம்ப கெட்டவர் அண்ணாச்சி.......!!!!!!!!!!!!!!!!!
:))))))))
4:53 PM
//
டிபிசிடி ஐயா,
அதை எனக்கு பின்னூட்டமிடும் 'ரொம்ப நல்லவன்' தான் உறுதிப்படுத்தனும் !
:)
//ஜோதிபாரதி said...
இறுதி வரிகள் நன்று.
அனுபவித்து எழுதியது போல் இருக்கிறது. சொந்த அனுபவமா?
அன்புடன்,
ஜோதிபாரதி.//
ஜோதிபாரதி,
அது ஒரு நொந்த அனுபவம் !
:)
இதிலிருந்து தெரிகிறது....
ஜோதிபாரதி பலவற்றை படிக்கவில்லை என்று. :-))
//வடுவூர் குமார் said...
இதிலிருந்து தெரிகிறது....
ஜோதிபாரதி பலவற்றை படிக்கவில்லை என்று. :-))//
வணக்கம் திரு.வடுவூர் குமார், தங்கள் இந்திய பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்!
ஆகா! அப்படின்னா தேடிப் படித்துவிட்டால் போச்சு.
சுட்டி கொடுத்தால் சுலபமாக முடியும்.
இல்லை என்றால் தட்டித் தட்டிப் படிக்க வேண்டும்.
அன்புடன்,
ஜோதிபாரதி.
:)
ஜோதிபாரதி, வடுவூரார்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
சில பூக்கள் கூடுதல் உரிமையெடுத்துக் கொல்(?)கின்றன அல்லது கூடுதல் சுயநலமிகளாய் இருக்கின்றன.
வாசம் தரும் பூக்கள் எல்லாம் என் தோழிகள்
என் தோழிகளில் எனக்குள்ள உரிமையும்
கடமையும் எவ்வளவென்று எனக்குத் தெரியுமென்று
என்னைத் தெரிந்த தோழிகளுக்குத் தெரியும்.
திரு.கோவி.கண்ணன் அவர்களே, தங்களது கவிதைகள் அனைத்தும் அருமை.
கவிதை அருமையா இருக்கு...
ரோஜா யாருன்னு அடுத்த பதிவில் போடுவீங்களா...
ஒவ்வொரு வரிகளும் உணர்வுள்ள வரிகள்
வாழ்த்துகள்
Nallaa irukku kavithai! :)
கோவி சார்..அந்த பூ நாகம் யார்?
//என்னுடன்
மீண்டும் பேசுவாய் என்றே எதிர்பார்த்து இருப்பேன்,
அன்றுவரை உன்மவுனம் எனக்கு
சம்மதமே !//
விட்டுக் கொடுப்பு உண்மையான அன்பின் வெளிப்பாடு. புரியாதவர்களுக்கும், புரிய மறுப்பவர்களுக்கும் இதன் வலி தெரிய வரும்...
Post a Comment