எனது இடுகைகளைப் படித்தவர்கள் பலருக்கு பரவலாக ஏற்பட்டிருக்கும் எண்ணம் 'நான் ஒரு நாத்திகவாதி'. நான் பலதரப்பட்ட பதிவுகளையும் விரும்பிப் படிப்பவன் அதுபற்றி கருத்து கொண்டிருப்பவன் என்ற போதிலும், பதிவுலகில் நுழைந்த காலகாட்டங்களில் (நீண்ட நாள் ஆனது போல் கட்டமைப்பு தான்) மிக்கவையாக கவனம் ஈர்த்தவை ஆன்மிகம், சமயம் தொடர்புடைய பதிவுகளே. அதைப்பற்றிய எழுதிய நண்பர்கள் நெருக்கமானார்கள், நெருக்கமாக இருந்தார்கள்.
ஆன்மிகம் வளர்ந்திருக்கிறது என்ற கருத்து... மக்கள் அனைவரும் எதோ ஒரு மதம் அல்லது சமயம் சார்ந்தவராக இருப்பதால் தெரியும் வெறும் தோற்றம். அது அப்படி அல்ல என்றே நினைக்கிறேன். ஆன்மிகம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எல்லா காலகட்டங்களிலும் போராடியே வந்து கொண்டிருக்கிறது. ஆன்மிகம் வென்றிருக்கிறது என்பதெல்லாம் தனிமனித நிராசைகளை தீர்த்துவைத்த நம்பிக்கையின் அடிப்படையிலான தனித் தனி கதைகளேயன்றி ஒரு சமூகப் புரட்சி செய்தது என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை இருந்தது இல்லை. அப்படி எதாவது செய்திருந்தால் அது சமயமாக பரிணமித்து அடிப்படைக் காரணங்கள் நீர்த்துப் போய் மறைந்து உருமாறி ஒரு பெயரில் நிலைத்திருக்கும். காலவெள்ளத்தில் பின்னால் அழிந்தே போகும். அது காலத்தின் கட்டாயம் என்றால் மிகையல்ல.
உலகில் உள்ள எல்லா மதங்களிலும் ஏற்பட்டிருக்கும் உட்பிரிவுகள் இதனை தெளிவாகவே காட்டுகின்றன. எந்த ஒரு மதமும் பிரிவுகளாக இல்லை என்று எவராலும் உறுதியாக சொல்ல முடியுமா ?
அண்மையில் தெக்கிகாட்டான் அவர்களிடம் சாட்டில் உரையாடிய போது 'ஆன்மிகம்' பற்றிய உரையாடல் வந்தது
"ஒரு மனிதன் தன்குள்ளே உள்ள இரட்டைத் தன்மையை உடைத்தெரிவது ஆன்மிகத்தின் இறுதி நிலை அல்லவா ?" என்றார் நல்ல சிந்தனை.
"ஆன்மிகத்துக்கு வரையறை இல்லை, விழிஒளியற்றோர் (Blind) யானையைத் தடவிப் பார்த்து சொல்வது போல்தான். அவரவர் அனுபவம் பொறுத்தும், தன் ஆன்மிகத் தேடலில் போதும் என்று அவர் நிற்கும் இடத்தை பொறுத்தும் இருக்கிறது" என்று சொன்னேன்
"ஆன்மிகத்திற்கும், மதவாதத்திற்கும் வேறுபாடு இருக்கிறது" என்றார்
"முதலில் இரண்டையும் பிரிக்க முயற்சி நடப்பதே இல்லை, பின்பு எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது ?" என்றேன்
ஆன்மிகவாதிகள் பிறப்பிற்கும் இறப்பிற்கும் விதி, இறைவனின் லீலை, இறைச் சித்தம் இன்னும் எந்தனையோ காரணங்களைச் சொன்னாலும், ஆன்மிகத்தால் தன்னை நோக்கி 'நான் யார்....நான் ஏன் பிறந்தேன் ?' என்று ஒருவன் தன்னைத்தானே கேட்க வைக்க முடியவில்லை என்றால் ஆன்மிகவாதிகள் சொல்லும் பிறப்பு கொள்கையும், அதன்பயனென அத்தனை காரணங்களுமே பயனற்றவை. அதைக் கேட்கவைப்பதில் ஆன்மிகம் இன்னும் போராடியே வருகிறது.
மதங்களால் நன்மை ஒன்றும் இல்லை. ஒரு கோட்பாட்டில் அதில் மூட நம்பிக்கையே மிக்கவையாக இருந்தாலும் அந்த நம்பிக்கையில் அந்த மதத்தைக் கடைபிடிக்கும் மனிதனை சாகும் வரையில் வைத்திருக்கிறது அம் மதங்கள். மதங்களைப் தவிர்பவனே ஆன்மிகவாதி, அதைச் செய்வதில் நாத்திகனே முன்னிற்கிறான். என்பார்வையில் நாத்திகனே உன்மையான ஆன்மிகவாதி. :) மற்றவர்கள் சுய தேடலைத் மறந்து கடவுள் கோட்பாடென்னும் மதக் கொள்கைகளை தாங்கிப்பிடிப்பவர்களாகவே உள்ளனர்.
மாதவிப் பந்தல் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு எழுதத் தொடங்கி சற்று நீண்டுவிட்டது,
ரவியின் மாதவிப் பந்தல் பதிவு பற்றி சொல்ல வேண்டும்... தலைப்பு தவறிவிடக் கூடாதல்லவா ?
ஏற்கனவே ஒரு தொடர்கதை மற்றும் ஒரு பதிவு பற்றிய நான் எழுதிய இருவேறு விமர்சனங்களுக்கு பிறகு என்மீதான அவதூறு விமர்சனங்களைத் தொடர்ந்து ... அதன் தொடர்புடைய (முன்னாள்) நண்பர்களிடம் நல்லுறவு இல்லை. இதையெல்லாம் சென்டிமெண்டாக எடுத்துக்கொண்டு கண்ணபிரான் ரவிசங்கர் பதிவை விமர்சனம் செய்ய கொஞ்சம் தயங்கினேன். ஒருசிலவற்றில் கடந்த காலங்களின் நிகழ்வுகளை தற்காலத்துடன் ஒப்பீடு செய்வதில் உடன்பட்டவன் அல்ல, எல்லாமும் எல்லாவற்றிற்கும் எப்போதும் பொருந்தும் என்று சொல்ல முடியாது என்பதால் எனது எண்ணத்திற்கு தடைபோட்டு மாதவிப் பந்தலின் நிழலில் அமர்ந்து பார்க்கிறேன். குளுமையான நிழல், கூடவே பந்தலின் அடர்த்தி சற்று குறைவால் கீற்றாக தெரியும் சூரிய ஒளி... அது சுடவில்லை... தனியாகத் தெரிந்தது.
இவரது ஆன்மிக சிந்தனைகளில், எழுத்தில் குறைச் சொல்ல முடியுமா ? எனக்கு அனுபவமோ அறிவோ போதாது என்றே நினைக்கிறேன். என்னளவில் அவரது எழுத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தெரிந்து கொண்டதில், ... எழுத்து அல்லது தன்னை நிலைநிறுத்துக் கொள்ளவேண்டும் என்பதைத் தாண்டி மிகவும் சிறப்பாகவே ஒரு சேவையாகவே செய்து வருகிறார்.
பால் இனிதுதான், அதனுடன் சர்கரை ஏலம் சேர்க்கும் போது, இனிமையும் மணமும் சேர்ந்து கொள்ளும், பாலின் சுவையை மேலும் இனிமை சுவை மிக்கவையாக ஆக்கிவிடும். இரவிசங்கர் எழுத்துக்களில் நகைச்சுவைக்குப் பஞ்சம் இருந்ததில்லை. பிறரை கேலி செய்து அதை நகைச்சுவை என்றாக்கும் அபத்தங்களை இவர் செய்ததே இல்லை. எவருடைய எதிர்கருத்தையும் தன்மீதான எதிர்தாக்குதல் போலவோ, தன்னை மேதாவி என்று காட்டிக் கொள்ளும் படியோ அவர்களுக்கு பதில் கருத்துக் கூறியதில்லை. எனக்கு தெரிந்து நாகரீகமற்ற கேள்விகளைக் கூட பொறுமையாகக் கேட்டுக் கொண்டு, பதில் அல்லது மறுமொழி சொல்வதன் நோக்கம் கேட்டவர்களை நாணம் கொள்ளச் செய்யவேண்டும் என்ற எண்ணமில்லாமல் இவர் சொல்லும் மறுமொழியால், நாகரீகமற்று கேட்பவரும் அடுத்தமுறை இவரிடம் அதுபோல் கேட்பதைத் தவிர்பர் அல்லது இவர் சொல்வதை ஏற்றுக் கொள்வர்.
நானும் இவரிடம் கற்றுக் கொண்டு மென்மேலும் வளர்த்துக் கொள்ள நினைப்பது பொறுமையும், மற்றவர்களை மதிக்கும் தன்மையையும் தான். அதைதாண்டி அவர் எழுதும் ஆன்மிகத்தில் எனக்கான பயன்பாடு குறைவே.
இவர் இடுகைகளில் பின்னனிகளுடன் கூடிய அரிய தகவல்களும், அரிய புகைப்படங்களும் ஒருசேர அமைந்திருப்பது மிகவும் சிறப்பானது. மற்றபடி அவரது ஆன்மிக எழுத்துக்களை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை என்று சொல்வதில் நான் வெட்கப்படவில்லை.
நான் இவரிடமும் இவரைப் போன்ற ஆன்மிகவாதிகளிடம் எப்போதும் வலியுறுத்துவது, உருவழிபாடு என்ற ஒன்றை மட்டும் சார்ந்திருக்கும் பக்தி இலக்கியங்களைத் தாண்டியும் கொஞ்சம் மேலே செல்லுங்கள்.
ஓரிறை (இறைவன் ஒருவர்), இறையற்ற தன்மை இரண்டில் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். மற்றபடி உருவழிபாடு அதைச் சார்ந்த மதக் கொள்கைகள் என்னதான் புனித முலாம் பூசப்பட்டாலும் அவற்றிற்கிடையிலான வேறுபாடுகள் வேற்றுமைகளை வெளிச்சம் போட்டு வெறுப்புகளை வளர்க்கின்றதேயன்றி சமுக மாற்றத்தை ஒருக்காலும் அவை ஏற்படுத்திவிடாது. இறை நம்பிக்கையுடையவர்கள் ஓரிறை என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்தால் 'ஆன்மிகம்' என்று சொல்லப்படுவதன் பயனை அனைவரும் அடைவர். பல கடவுள்கள் வெறும் பக்திக் கோட்பாடுகளேயன்றி அவை ஆன்மிகம் அல்ல. அதே போல் பல மதங்கள் சொர்கம் நரகம் என்ற நம்பிக்கைச் பயமுறுத்தல் தவிர்த்து இவை தனிமனிதனுக்கு எந்த நன்மையும் செய்தது இல்லை. எந்த ஒரு மதமும் சிறந்த மதம் கிடையாது. அப்படி ஒன்று இருந்திருந்தால் எப்போதோ உலகம் முழுவதும் ஒரே மதமாக ஆகி இருக்கும்.
இந்துமதத்தில் உருவழிபாடு போற்றப்படுவதற்குக் காரணம், இல்லற வாழ்க்கைப் போலவே கடவுளுக்கும் குடும்பம் மனைவி மக்கள் அமைத்து வழிபடும் முறை இல்லறவாழ்வின் மேன்மையை புனித இடத்தில் நிறுத்திப் பார்க்கும் மன வடிவம். உருவ வழிபாடு முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது. அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் இறை நம்பிக்கை என்ற பெயரில் வெறும் சடங்குகளாகவும் அதன் தொடர்பில் 'தீண்டாமை / பார்பனீயம்' போன்ற மோசமான கட்டமைப்பை கட்டிக் காக்கும் கேடயங்களாக இருப்பதால் நான் உருவவழிபாட்டை ஆன்மிகத்தின் அடையாளமாக நினைப்பது இல்லை.
அன்பு நண்பர் கண்ணபிரான் ரவி சங்கர் அவர்களே,
வைணவம், சைவம், என்று பிரித்துப் பார்த்தல், அவை அவற்றின் சிறப்புத்தன்மைக்காக தனியாகவே பார்க்க வேண்டும், ஒன்றில் உள்ள சிறப்பு மற்றதில் இல்லாதது குறையல்ல ஒருவேளை அவை தேவையற்றதாகக் கூட இருக்கும். இன்றைய தமிழக இந்துக்களிடம் ஆழமாக பதிந்துவிட்டது திருமாலுக்கும் சிவனுக்கும் இடையே உள்ள உறவு மச்சான் (பார்வதியின் அண்ணன்) என்பதே. மோகினி - சிவன் போன்ற (கள்ள) உறவும் உண்டு. வைணவம், சைவம் என்று பிரித்துப் பேசுவது எந்தவிதத்திலும் பக்தியாளர்களுக்கு பயன்தராது. நீங்கள் அப்படி எழுதுகிறீர்கள் என்று சொல்லவில்லை. பெரும்பாண்மை பதிவுகள் வைணவம் சார்ந்ததாகவே இருக்கிறது என்று நான் சொல்லி புரிந்து கொள்ள வேண்டுமா ? கண்ணபிரான் ரவிசங்கர் ஒரு வைணவர் என்று என்போன்ற பலருக்கு ஏற்பட்ட எண்ணத்தை உடைத்து எரியுங்கள்.
மேலும் ஒரு வேண்டுகோள்,
வலைவரை வந்து நெடிது வளர்ந்திருக்கும் தமிழை செழிக்க வைக்க வேண்டும், தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் இறைமறுப்பாளர்களா ? இறை ஏற்பாளர்களா ? இது சிறந்த புலவர் யார் இளங்கோவா ? கம்பனா ? என்று கேட்பதற்கு ஒப்பானது. இருபக்கமும் அதை நன்றாகவே செய்துவந்திருக்கிறார்கள், வருகிறார்கள். இங்கு வலையில் எழுதுகிறோம், நமது எண்ணங்களை எழுதும் போது கூடவே தமிழார்வத்தையும் ஏற்படுத்தும் வண்ணம் எழுதிவரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். செம்மொழி தகுதி கிடைத்து இருப்பதால் தமிழருக்கு என்ன நன்மை ?என்றெல்லாம் கேட்பவர்களும் தமிழர்களாக இருக்கிறார்கள். நாம் தமிழை செம்மையாக எழுத எழுத படிப்பவர்களின் எண்ணங்களிலும் தூய தமிழ்ச் சொற்கள் பதிந்துவிடும், 1900 ஆண்டு இருந்த தமிழுக்கும் தற்பொழுது எழுத்துத்துத் தமிழுக்கும் வேறுபாடுகள் மிக்கவையாகவே இருக்கிறது. தற்பொழுது 90 விழுக்காடு தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தி வருகிறோம் அதை 100 விழுக்காடாக மாற்றும் முயற்சி நமது கையில் தான் இருக்கிறது. ஆரம்பத்தில் எளிமையான, புரியும் படியான தமிழ்ச் சொற்களை பதிவில் பயன்படுத்துவது எனக்கும் கடினம் மிக்கவையாகவே இருந்தது, தற்பொழுது வேற்று மொழிச் சொற்களை முற்றிலும் தவிர்த்துவிட்டு எழுதுவது எனக்கு இயல்பாகிவிட்டது.
உங்கள் இடுகைகள் அனைத்தும் பெரும்பகுதி தூயத்தமிழாகவே இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அரிசியில் கருங்குருணை கிடப்பது போல் வெகு சில வேற்றுச் சொற்கள் இருக்கின்றன. எழுதும் போது ஒருமுறை படித்துவிட்டு வேற்று மொழிச் சொற்களின் மாற்றுச் சொற்களை அந்த இடங்களில் சேர்க்கலாம், சங்ககாலத் தமிழில் எழுதவேண்டும் என்று சொல்ல வரவில்லை, புழக்கத்தில் இருக்கும் சொற்களையே முற்றிலுமே பயன்படுத்த முடியும். தங்கள் எழுதும் பதிவுகள் தனித்தமிழாக வரவேண்டும் என்று விரும்புகிறேன். பலமொழிகள் தெரிந்த உங்களுக்கு தமிழில் உள்ள வேற்றுமொழிச் சொற்களின் அடையாளம் நன்றாகவே தெரிந்திருக்கும். அவைகளை களைந்துவிட்டு எழுதவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு தகுதி இருப்பதாக நினைத்து மாதவிப்பந்தல் பற்றி என் எண்ணங்களைப் பகிரிந்து கொள்ளக் கேட்டு வாய்ப்பளித்த கண்ணபிரான் ரவிசங்கர் (கேஆர்எஸ்) என்றும் ரவி என்றும் அன்புடன் அழைக்கப்படும் ரவி அவர்களுக்கு நட்சத்திர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
விதிகள் (நண்பர்களுக்காகவும்) காலத்தால் (இடம்) மாறும்.
:):):)
--
அன்புடன்,
கோவி.கண்ணன்
Sunday, March 16, 2008
ரவியை விமர்சனம் செய்ய எனக்கு என்ன தகுதி இருக்கிறது ?
குறிசொற்கள்
பதிவர்வட்டம்,
மாதவிபந்தல்,
ரவிசங்கர்,
விமர்சனம்
Thursday, January 31, 2008
கவிஞனின் காதல் கரு !

என் கருவுக்கு நீதான் உரு...!
கவிதை எழுதி எழுதி
உருவன காதல்
அவள் கருவானதும்,
கவிதை எழுதி எழுதி
உருவன காதல்
அவள் கருவானதும்,
கவிதையும் கவிஞனும்
காணாமல் போனது !
காணாமல் போனது !
குறிசொற்கள்
கவிதைகள்
Thursday, December 27, 2007
பொறுப்பு !

காதை செவிடாக்கும் பெரும் வெடிச்சத்தம்,
கபாலம் உடைந்து இரத்தம் வடியும் தலைகள்,
இனி ஒன்றுமில்லை என்று காட்டியபடி,
இரத்தம் வடிந்து, விரிந்து துவண்ட கைகள்,
உள் ஆடைகளை வெளிப்படுத்தியபடி,
இரத்தத்தில் நினைந்த நயிந்த மேலாடைகள்,
வெட்டி தூக்கி எறியப்பட்டதுபோல்
எட்டடி தாண்டி விழுந்த கால்கள்,
வெளியுலகை சரிந்தபடி,
எட்டிபார்க்கும் பெருங்குடல்கள்,
பாதி எரிந்து,
இன்னும் எரிந்து கொண்டிருக்கும் வாகனங்கள்,
சிதறிய காலணிகள் !
பிளந்து விரிந்த மார்பின் வழியாக
இயற்கை காற்றை சுவாசிக்க முனைந்து
தோற்ற இதயங்கள் !
கடைசியாய் உலகை கேள்வியுடன்,
கேலியாய் பார்த்தபடி அடங்கிய கண்கள் !
இந்த பரபரப்புகள் அடங்குமுன்,
பூமியில் இரத்தம் காயும்முன்,
அங்க அடையாளம் காணும்முன்,
துப்பு துலங்கவில்லை என்று கூறி
பாதுகாப்புத்துறை கைவிறித்து விடக்கூடாது,
என்பதில் அக்கறைகொண்டு,
இப்பொழுதெல்லாம், பொறுப்புடன்
நடந்து கொள்கிறார்கள்,
தீவிரவாதக் குழுக்கள் !
சலனப்படாமல், சத்தமாக உடனே
சொல்லி விடுகிறார்கள்,
தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம் !
திண்ணையில் எழுதியது Friday October 21, 2005
கபாலம் உடைந்து இரத்தம் வடியும் தலைகள்,
இனி ஒன்றுமில்லை என்று காட்டியபடி,
இரத்தம் வடிந்து, விரிந்து துவண்ட கைகள்,
உள் ஆடைகளை வெளிப்படுத்தியபடி,
இரத்தத்தில் நினைந்த நயிந்த மேலாடைகள்,
வெட்டி தூக்கி எறியப்பட்டதுபோல்
எட்டடி தாண்டி விழுந்த கால்கள்,
வெளியுலகை சரிந்தபடி,
எட்டிபார்க்கும் பெருங்குடல்கள்,
பாதி எரிந்து,
இன்னும் எரிந்து கொண்டிருக்கும் வாகனங்கள்,
சிதறிய காலணிகள் !
பிளந்து விரிந்த மார்பின் வழியாக
இயற்கை காற்றை சுவாசிக்க முனைந்து
தோற்ற இதயங்கள் !
கடைசியாய் உலகை கேள்வியுடன்,
கேலியாய் பார்த்தபடி அடங்கிய கண்கள் !
இந்த பரபரப்புகள் அடங்குமுன்,
பூமியில் இரத்தம் காயும்முன்,
அங்க அடையாளம் காணும்முன்,
துப்பு துலங்கவில்லை என்று கூறி
பாதுகாப்புத்துறை கைவிறித்து விடக்கூடாது,
என்பதில் அக்கறைகொண்டு,
இப்பொழுதெல்லாம், பொறுப்புடன்
நடந்து கொள்கிறார்கள்,
தீவிரவாதக் குழுக்கள் !
சலனப்படாமல், சத்தமாக உடனே
சொல்லி விடுகிறார்கள்,
தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம் !
திண்ணையில் எழுதியது Friday October 21, 2005
பெனாசீர் படுகொலை செய்யப்பட்டதை பின்லாடனின் அல்கொய்தா பொறுப்பேற்றுக் கொண்டதாம், அதைப் படித்ததும், மீண்டும் நினைவுக்கு வந்தது..
குறிசொற்கள்
கவிதைகள்
Thursday, December 20, 2007
பூக்களின் மவுனம்...

இலவச உதவி எவரிடமும் கேட்காதே ...
இயற்கைச் சொல்லித்தரும் பாடம்,
கனியில் சுவை இல்லாது போனால் ?
அசையாது இருக்கும் மரம் செடிகள்
அகிலம் முழுவதும் பரவ, அவற்றின்
விதைப்பரவல் என்பது சாத்தியமா ?
கனியின் சுவையால் மரம் செடி கண்ட பலன்
எதுவுமில்லை, மறைமுகமாக
என் வித்தை விதைக்கும் உனக்கு என்
கைமாறு இதோ என் கனிகள் !
கைகண்ட பலன் விதைப்பரவலே.
வண்ணமும் மணமும் பெற்றுக் கொள்,
அருகில் வந்தால் இன்னும் கூட
பரிசு...!
தேனையும் உரிஞ்சலாம்,
தேன் ஈயே...!
இவற்றிற்கு உன் கால்மாறு
என் (மகரந்த) சேர்க்கைக்கு உதவுவது.
"உனக்கு உதவி தேவைப்படும் முன்
உதவுபவர்களுக்கு விருந்தை
தயாராக வை...!"
மென்மைப் பூக்களின் மேன்மை
அழகிலும் மணத்திலும் மயங்கி
வண்ண இதழ்களின் ஊடே
தேன் துளியைச் சுவைத்துக் கொண்டே
வண்டுகள் பாடும் ரீங்காரம்...
பூக்களின் மெளன மொழியை
புரிந்து கொள்பவர்களுக்கென
மொழிப்பெயர்த்துக் கொண்டே தான்
இருக்கின்றன...
குறிசொற்கள்
கவிதைகள்
Saturday, December 01, 2007
எதற்கு காத்திருக்கிறேன் ?

புள்ளிக்குள் அடங்கியாக புள்ளியாக மாறி
புள்ளையாய் மாற எப்போது காத்திருந்தேன் ?
கனநேரத்தில் காத்திருப்பின்
கனம் உடைந்து அப்பன்
உடலுக்குள் உயிராய் வந்த
தருணங்கள் என்று வந்தது?
விடையேதும் அறியாமல் சிந்துத்து
காத்திருந்திருக்கிறேன் !
கருவில் உருவாகி, ஒருவழி உலக வாசல்
ஒன்றில் இருந்து உதிக்கும் நேரம்
எதுவென்று தெரியாமல்
இருப்பை உணர்த்தி
உதைத்துக் கொண்டு காத்திருந்தேன் !
எந்த ஊர், எந்த நாட்டில்
என்று நான் புறப்பட்ட இடத்திற்கு
மீண்டு(ம்) செல்வேன் என்று
அறியாமல் காத்திருக்கிறேன்.
கனங்கள் எல்லாமே காத்திருப்பின்
கனங்களாகவே இருக்கிறது !
என்றிங்கு வாழ்ந்தேன் ?
எல்லா நேரமும் காத்திருக்கிறேன்.
எனக்கே என் காத்திருப்பின்
காலமும் நோக்கமும் தெரியாத போது,
எதற்காக காத்திருக்கிறேன்
என்று நினைக்கும் போது ?
எனக்காக காத்திருப்பவர்
என்று எவரும் இருக்க முடியுமா ?
புள்ளையாய் மாற எப்போது காத்திருந்தேன் ?
கனநேரத்தில் காத்திருப்பின்
கனம் உடைந்து அப்பன்
உடலுக்குள் உயிராய் வந்த
தருணங்கள் என்று வந்தது?
விடையேதும் அறியாமல் சிந்துத்து
காத்திருந்திருக்கிறேன் !
கருவில் உருவாகி, ஒருவழி உலக வாசல்
ஒன்றில் இருந்து உதிக்கும் நேரம்
எதுவென்று தெரியாமல்
இருப்பை உணர்த்தி
உதைத்துக் கொண்டு காத்திருந்தேன் !
எந்த ஊர், எந்த நாட்டில்
என்று நான் புறப்பட்ட இடத்திற்கு
மீண்டு(ம்) செல்வேன் என்று
அறியாமல் காத்திருக்கிறேன்.
கனங்கள் எல்லாமே காத்திருப்பின்
கனங்களாகவே இருக்கிறது !
என்றிங்கு வாழ்ந்தேன் ?
எல்லா நேரமும் காத்திருக்கிறேன்.
எனக்கே என் காத்திருப்பின்
காலமும் நோக்கமும் தெரியாத போது,
எதற்காக காத்திருக்கிறேன்
என்று நினைக்கும் போது ?
எனக்காக காத்திருப்பவர்
என்று எவரும் இருக்க முடியுமா ?
கடக்கும் 'காலங்களைத்' தவிர
யாருக்காவும் யாரும், எதுவும்
காத்திருப்பதில்லை !
----
அன்புடன்,
கோவி.கண்ணன்
----
அன்புடன்,
கோவி.கண்ணன்
குறிசொற்கள்
கவிதைகள்
Sunday, November 18, 2007
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் !

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் !
நீ(ர்) ஊற்றாமல் வாடுகிறது
பூச்செடிகள்,
அணைக்க மறந்து போட்ட
விளக்குகள்,
போட மறந்த விளக்குகள்
எல்லாம் தன்னிலை
மறந்த நிலையில்.
முன்பெல்லாம்
அடிக்கடி பூ உதிர்க்கும்
சாமி படங்களும் பயத்துடன்
என்னை நினைத்து
அமைதி காக்கின்றன !
காயவைத்த காய்ந்துபோன
துணிகள், துவைக்கப்போட்டு
காய வைக்காமல் இருக்கும்
துணிகள் இன்னும் இடம்
மாறாமல் இருக்கிறது.
அமைதியாக பேசும்
தொலைக்காட்சி அணையா
விளக்காக ஆரவராம்
பண்ணிக் கொண்டிருக்கிறது
பழைய சோற்றை
பல ஆண்டுகளுக்கு
பிறகு தின்று பார்க்கிறேன் !
கழட்டிப் போட்ட
துணிகள் கவனம் பெறாமல்
குவிந்திருக்கிறது.
துடைப்பம் இருக்குமிடம்
மட்டும் தூசி இல்லாமல்
இருக்கிறது.
பாத்திரங்கள் விளக்கப்படாமலேயே
பல் இளிக்கிறது.
குளிர்சாதனப் பெட்டியில்
எல்லாம் 'உறைந்தே' இருக்கின்றன.
நீ இல்லாத உன்
இரண்டுவாரப் பயணத்தின்
முதல் மூன்றே நாளில் கண்டு
கொண்டேன்.
உன் தற்காலிக பிரிவால்,
வருந்தி இருக்கும் எனக்கு
தூக்கம் வரவேண்டுமே அதற்காக
மட்டும் அளவாக கொஞ்சம்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அடிக்கடி தொலை பேசு !
குறிசொற்கள்
கவிதைகள்
Wednesday, November 14, 2007
திகட்டலின் ஏக்கம் !
நன்கு திகட்டிய உணவை
மற்றொரு நாள் சுவைக்க
எழும் ஏக்கத்தைபோல்,
புளித்துப் போனவை என்று
ஒதுக்கியவை கூட,
என்றோ ஒரு நாள் நினைவில்
இனிக்கத்தான் செய்கிறது !
இனி எதும் வேண்டாம் என்ற
வீராப்புகளை, உறுதிகளை
எடுக்கத் தூண்டுகின்ற உராய்வினால்
ஏற்பட்ட சிராய்ப்பின்,
குறுதி காய்ந்ததும்,
என்றோ ஒரு நாள் அதன் மேல்
அடிக்கும் மெல்லிய தென்றல்
காயங்களை வருடிவிட்டுச்
செல்கின்றன.
காயங்களின் அடையாளம் ?
வெறுப்பை மட்டுமா சுமக்கிறது ?
எண்ணிப்பார்த்தால் ஏமாற்றம் !
காயத்தளும்புகளின் மேல் ஒவ்வொரு
மெல்லிய வருடலும்
காயமற்ற காலங்களையும்
கிளறி காட்டிவிட
அதன் சிலிர்பலையில்
அதே திகட்டிய உணவை
மீண்டும் சுவைக்க
ஏங்குகிறது எண்ணங்கள் !
குறிசொற்கள்
கவிதைகள்
Monday, October 15, 2007
அழகு குறிப்புகள் [1]... !

கண்ணாடிக் கூண்டுக்குள் கருநாகம்
படமெடுத்தால் பார்பதற்கு
பதைக்க வைக்கும் அழகோ அழகு !
சீறிவரும் காளையதன் திமிளை
சிலுப்பி ஓடிவரும் வீரம்
சேர்ந்து பார்தால் அழகு !
அடை மழைவிழுந்தும்
அசைந்து கொடுக்காமல் அசைபோடும்
எருமையின் பொறுமை அழகு !
சங்கிலியில் பிணைக்கப்பட்ட
குட்டி நாயின் நம்மைப் பார்த்த
குறைப்பொலியும் குறையில்லா அழகு !
சலங்கையின்றி சதிராட
சண்டித்தனம் செய்யாமல்
குதித்தாடும் குதிரை அழுகும் அழகு !
கூண்டுக்குள் அடைபட்ட
ஆத்திரத்தில் பச்சையாக அலகைபிளந்து
பேசும் பசும் பைங்கிளியின் குரலழகு !
சிறிய வாலை சிலிர்புடன் ஆட்டியபடி
தாய் ஆட்டின் மடியை
முட்டிக் குடிக்கும் குட்டியாடும் அழகு !
ஓடும் காலளவு நீரில்
ஆடாது அசையாது நீண்ட காலில்
ஒன்றை தூக்கி தவமிருக்கு கொக்குமழகு !
தெளிந்த நீரோடையில் குட்டி
மீன்களுடன் இறைதேடி வலம்வரும்
குரவை மீன்களின் அசைவுகள் அழகு !
அழகு குறிப்புகள் அவ்வப்போது தொடரும் ...
அன்புடன்,
கோவி.கண்ணன்
குறிசொற்கள்
கவிதைகள்
Sunday, September 09, 2007
தன்நலமே பொதுநலம் ?
தன்நலமே பொதுநலம் ?
கண்ணை மூடிக்கொண்ட வானத்தின்
நடுப்பொழுதில் விழித்துக் கொண்டது
சில நினைவுகள், எண்ணங்கள்.
மனிதர் தன்நலமிக்கவர்களா ?
நான் தன்நலன் மிக்கவனா ?
சில செயல்களைப் பார்த்தால்
அப்படித்தான் தெரிகிறதே ! என்று
உள்மனம் சொல்லியது.
இன்னும் யோசித்தேன்.
தவறுகளை மறைக்க நினைப்பது
தன்நலமா ?
இல்லையே, அவை
தமக்குத் தாமே, உள்ளத்துக்கு
செய்து கொள்ளும்
கேடுகள் என்றது ஆள்மனம் !
எப்படி ? எப்படி ? கேட்டேன் நான்.
உண்மைகளை மறைக்கலாம்,
தற்காக்கலாம், ஆனால்
தூயமனம் என்ற உள்ளுணர்வு
பழுதாகி இருப்பதை சிறிதேனும்
உணர்கிறோம் அல்லவா ?
உடல்சார்ந்த, இன்பம் சார்ந்த,
தம்மீது பழிச்சொல் விழாது தற்காப்பது
என்ற நலம் மட்டும்தான் தன்நலமா ?
மறுபடியும் எதிர்கேள்விகள் !
இல்லை அவை உண்மையாக இருக்க முடியாது
அவை தற்காலிக வடிகால்,
அதில் காயப்பாடுவது உள்மனமே
இரணம் இருந்தாலும்,
சொறியும் ஒரு சுகம் போல்
வெளிப்பகட்டில் ஆசை கொள்வது
இத்தகைய தன்நலம்.
உண்மையான தன்'நலம்' என்பது
உள்ளத் தூய்மையே ! இந்த
தன்நலத் தேடலில் இருக்கிறது...
அதைக் காப்பதன் பொருட்டில்
வாய்மை வழிநடப்பதில் இருக்கிறது
கூடவே பொதுநலமும் !
உள்ளத் தூய்மையான
தன்நலமே இறக்கும் தருவாயிலும்,
தாம் எவருக்கும் தீங்கு செய்யவில்லை,
நிம்மதியுடன் கண் மூடலாம்,
என்ற உணர்வை தரவல்லது.
இறுதியாக புரிந்த போது
தூங்கிப் போனேன் !
குறிசொற்கள்
கவிதைகள்
Friday, August 10, 2007
நொடிக்கவிதைகள் அருட்பெருங்கோவுக்கு போட்டியாக ! :)
நொடிக்கவிதைகள் !
நொடிக்குள் பூகம்பம் நிகழும் ?
உன்னைப் பார்த்ததும் உணர்ந்தேன் !!
உன் தூண்டில் மீன் விழிகளில்
அகப்பட்டுக் கொண்டேன் நான் !
கன்னம் கூட இனிப்பறிந்தது
நீ தந்த 'இச்சால்'
நான் சுயநலக்காரன் ? உன்னைப் பார்த்த
அன்றே மறந்துவிட்டேன் என் சுயத்தை !
உன் இமைகள் அசைவின் ஒலியை
என் இதயம் கேட்பது எப்படி ?
உன்னைப் பார்த்ததும் உணர்ந்தேன் !!
உன் தூண்டில் மீன் விழிகளில்
அகப்பட்டுக் கொண்டேன் நான் !
கன்னம் கூட இனிப்பறிந்தது
நீ தந்த 'இச்சால்'
நான் சுயநலக்காரன் ? உன்னைப் பார்த்த
அன்றே மறந்துவிட்டேன் என் சுயத்தை !
உன் இமைகள் அசைவின் ஒலியை
என் இதயம் கேட்பது எப்படி ?
குறிசொற்கள்
கவிதைகள்
Thursday, July 12, 2007
முதல் அழு குரல்கள் !
பிணம் தின்னிக் கழுகுகள்,
கொடிய விஷப்பாம்புகள்,
தந்திர நரிகள்,
இவைகளெல்லாம்
மனித உருவில் நடமாடுவதைப்
பார்க்கப் போகிறேனே !
கொலைவெறி கண்கள்,
கழுத்தை இறுக்கும் கரங்கள்,
வீசருவாள், வேள்கம்பு, விஷநாக்கு
நடமாடும் மனித மிருங்கங்கள்,
இவர்களின் சாதி (கெடு)நிழலும்,
மத (அவப்)பெயரும் இனி விழப்போவது,
சுவர்க்க கருவறை விட்டு
விட்டு வரும் என்மீது தானா ?
நரகத்தை அறிந்தும், கள்ளங்கபடம் அற்றக்
குழந்தைகளின் குரல்வலையில்
இருந்து முதல் அளறல்கள் தான் கேட்கிறது !
எந்த ஒரு மகப்பேறு அறையிலும் !
நரகத்தை அறிந்தும், கள்ளங்கபடம் அற்றக்
குழந்தைகளின் குரல்வலையில்
இருந்து முதல் அளறல்கள் தான் கேட்கிறது !
எந்த ஒரு மகப்பேறு அறையிலும் !
குறிசொற்கள்
கவிதைகள்
Sunday, June 17, 2007
அப்பாவுக்கு அப்பாவாக ! இன்று தந்தையர் நன்நாள் !
இன்றைக்கு தந்தையர் தினம். பெற்றோர் இருவரில் உயர்ந்தோர் யார் என்று சொல்லவே முடியாது. இந்த பதிவு...தந்தையின் மதிப்பை உணர்ந்தவர்களுக்கும்... தந்தையை இழந்து அவர்தம் நினைவை அசைபோட்டு நெகிழ்பவர்களுக்கும் சமர்பணம். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதி...சிங்கை தமிழ்முரசில் வெளிவந்த ஒரு கவிதை(முயற்சி)
அப்பாவுக்கு அப்பாவாக !

இருபதை கடந்த இளைஞனாய் இருந்த நான்
இல்லறம்கான திருமணம் செய்து வாழ்தினாய் நீ !
இனிய இல்லறம் நடத்திய உனக்கு
இன்னொரு அறுபதாம் திருமணம் செய்து வாழ்துப் பெற்றேன் நான் !
நடந்த என்கால்கள் மிதிவண்டி பழக
மிதிவண்டி வாங்கி வந்தாய் நீ !
நடந்த உன்கால்கள் தடுக்கி விழாமல் இருக்க
ஊன்றுகோல் வாங்கி வந்தேன் நான் !
தேழனாய் மாறி பாலன் என்னுடன்
பம்பரம், கோலி விளையாடி மகிழ்ந்தாய் நீ !
தோழனாய் மாறி பழுத்த உன்னுடன்
பரமபதம், சோளி விளையாடி மகிழ்ந்தேன் நான் !
திருவிழாக்களுக்கும், கடைவீதிகளுக்கும்
அன்பாக தூக்கி சென்றாய் நீ !
திருக்கோவில்களுக்கும், கடற்கரைகளுக்கும்
அன்பாக அழைத்து சென்றேன் நான் !
அருகிலிருந்து அக்கறையாய் எனக்கு
அரிச்சுவடி சொல்லி கொடுத்தாய் நீ !
அருகிலிருந்து ஆர்வத்துடன் உனக்கு
அன்றாட செய்திகளை வாசித்தேன் நான் !
யானையாய் மாறி என்னை இடம் வலமாய்
தூக்கி சுமந்தது மகிழ்த்து, மகிழ்ந்தாய் நீ !
பூனையாய் மாறி உன்னை அங்கும் இங்கும்
தூக்கி அறைகுள் இடம் மாற்றி நெகிழ்ந்தேன் நான் !
தவழ்ந்தது போதும் என்று
தள்ளாடி தள்ளாடி எழுந்த நான்
தடுக்கி விழாமல் நடை பழக
தள்ளும் நடைவண்டி வாங்கினாய் நீ !
தளர்ந்ததால் உன் நடை
தள்ளாடி தள்ளாடி
தவழவும் நிலைக்கு வந்த போது
தள்ளும் சற்கர நாற்காலி வாங்கினேன் நான்!
எனக்கொரு குழந்தையாய் மாறினாய் நீ !
உனக்கொரு தந்தையாய் மாறிப் போனேன் நான் !
கருவறைவிட்டு வந்த என்னை,
ஆனந்த கண்ணீருடன், நெகிழ்ந்த இதயத்துடன்
கைகளில் ஏந்தி சென்றாய் நீ !
கல்லறைக்குள் விட்டு செல்ல உன்னை,
ஆ(ற்)றாத கண்ணீருடன், கனத்த இதயத்துடன்
தோள்களில் தூக்கி செல்கிறேன் நான் !
அன்புடன்
கோவி.கண்ணன்
இணைந்த கைகள் அந்திநேர தென்றல் காற்று....பாடலையும் கேட்டு மகிழுங்கள்
அப்பாவுக்கு அப்பாவாக !
இருபதை கடந்த இளைஞனாய் இருந்த நான்
இல்லறம்கான திருமணம் செய்து வாழ்தினாய் நீ !
இனிய இல்லறம் நடத்திய உனக்கு
இன்னொரு அறுபதாம் திருமணம் செய்து வாழ்துப் பெற்றேன் நான் !
நடந்த என்கால்கள் மிதிவண்டி பழக
மிதிவண்டி வாங்கி வந்தாய் நீ !
நடந்த உன்கால்கள் தடுக்கி விழாமல் இருக்க
ஊன்றுகோல் வாங்கி வந்தேன் நான் !
தேழனாய் மாறி பாலன் என்னுடன்
பம்பரம், கோலி விளையாடி மகிழ்ந்தாய் நீ !
தோழனாய் மாறி பழுத்த உன்னுடன்
பரமபதம், சோளி விளையாடி மகிழ்ந்தேன் நான் !
திருவிழாக்களுக்கும், கடைவீதிகளுக்கும்
அன்பாக தூக்கி சென்றாய் நீ !
திருக்கோவில்களுக்கும், கடற்கரைகளுக்கும்
அன்பாக அழைத்து சென்றேன் நான் !
அருகிலிருந்து அக்கறையாய் எனக்கு
அரிச்சுவடி சொல்லி கொடுத்தாய் நீ !
அருகிலிருந்து ஆர்வத்துடன் உனக்கு
அன்றாட செய்திகளை வாசித்தேன் நான் !
யானையாய் மாறி என்னை இடம் வலமாய்
தூக்கி சுமந்தது மகிழ்த்து, மகிழ்ந்தாய் நீ !
பூனையாய் மாறி உன்னை அங்கும் இங்கும்
தூக்கி அறைகுள் இடம் மாற்றி நெகிழ்ந்தேன் நான் !
தவழ்ந்தது போதும் என்று
தள்ளாடி தள்ளாடி எழுந்த நான்
தடுக்கி விழாமல் நடை பழக
தள்ளும் நடைவண்டி வாங்கினாய் நீ !
தளர்ந்ததால் உன் நடை
தள்ளாடி தள்ளாடி
தவழவும் நிலைக்கு வந்த போது
தள்ளும் சற்கர நாற்காலி வாங்கினேன் நான்!
எனக்கொரு குழந்தையாய் மாறினாய் நீ !
உனக்கொரு தந்தையாய் மாறிப் போனேன் நான் !
கருவறைவிட்டு வந்த என்னை,
ஆனந்த கண்ணீருடன், நெகிழ்ந்த இதயத்துடன்
கைகளில் ஏந்தி சென்றாய் நீ !
கல்லறைக்குள் விட்டு செல்ல உன்னை,
ஆ(ற்)றாத கண்ணீருடன், கனத்த இதயத்துடன்
தோள்களில் தூக்கி செல்கிறேன் நான் !
அன்புடன்
கோவி.கண்ணன்
இணைந்த கைகள் அந்திநேர தென்றல் காற்று....பாடலையும் கேட்டு மகிழுங்கள்
குறிசொற்கள்
கவிதைகள்
Friday, June 15, 2007
சாதி விந்து !
நான் உயர்ந்தவன்,
நீ தாழ்ந்தவன் என்ற போராட்டம்
ஒரு புறம் நடந்து கொண்டிருக்க,
குழந்தை இல்லாதவருக்காக,
டெஸ்ட் டியூபில் சங்கமித்து
முத்தமிட வந்த
தாழ்ந்த சாதி விந்தை
உயர்சாதி கருமுட்டை
அன்பு மாறாமல்
ஏற்றுக் கொண்டது !
சாதிவேறுபாடுகள்
விந்திற்கோ, கருமுட்டைக்கோ
இல்லை !
அவை கூமுட்டைகளுக்கு மட்டுமே !
குறிசொற்கள்
கவிதைகள்
Tuesday, May 01, 2007
இந்த காலத்து பாரதிகள் !
தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் !
நீதி உயர்ந்தமதி கல்வி, இடஒதுக்கீடே
கூடாது என்பவர்கள் மேலோர் !
குறிசொற்கள்
கவிதைகள்
Sunday, April 22, 2007
மரணமில்லா பெரியார் வாழ்வு !
பெரியார் எப்போதும் வாழ்கிறார்,
இறப்பென்பது அவருக்கு இல்லவே
இல்லை !
ஆம் !!
அதை அவ்வப்போது மெய்பிக்கிறார்கள்,
சமூக வெறுப்பாளர்கள்,
பெரியார் சிலையை சேதப்படுத்திக் காட்டி !!!
குறிசொற்கள்
பெரியார்
Sunday, April 08, 2007
நேற்றும் நாளையும் = இன்று ?
இல்லாத ஒன்றை கற்பனை செய்ய முடியாத
மனம் செக்கு மாடாக சுற்றி வருகிறது.
நிகழ்காலத்தில் எதிர்காலத்தை நினைக்கிறேனா ?
கடந்த காலத்தை எதிர்காலத்துடன் இணைக்கிறேனா ?
உண்ணுவது, உறங்குவது என்பது போல்
அன்றாடம் செய்யும் வேலைகளை வைத்துப் பார்த்தால்
இன்றைய நாள் புதிதாக தெரியவில்லை.
நேற்றைய நினைவும், நாளைபற்றிய சிந்தனையும்
தவிர்த்து இன்றைக்கு என்ன செய்யப்போகிறேன் ?
என்று நினைக்கும் போது, இன்று செய்யப் போவதும்
என்றோ நினைத்ததாகவே இருக்கிறது.
இன்று என்பது,
(நேற்றைய) ஆடையை களைந்து,
(நாளைய) ஆடைய அணிவதற்குள்
இருக்கும் இடைப்பட்ட சிறிதளவு
நிர்வாண காலமாகவே இருக்கிறது.
குறிசொற்கள்
கவிதைகள்
Friday, March 30, 2007
புதிய தேசீய கீதம் !
நாமெல்லாம் இந்தியர்கள்,
இந்தியர் என்றால் இந்துக்கள்,
'இந்தூ'ய தேசீ'யம் காப்போம்
இந்தியனாக இருப்போம்
இந்து கடைகளிலேயே பொருட்கள்
வாங்குவோம்,
பிச்சை எடுத்தாலும் மாதாகோவில்களிலோ,
தர்காக்களிலோ எடுப்பதை வெறுப்போம் !
பகவானுக்கு முன்னால்
இந்துக் கோவில்களின் வாசலில் மட்டும்
அமர்ந்து பிச்சை எடுப்போம்
நாமெல்லாம் வெறும் இந்தியர்கள் மட்டுமல்ல
இந்தியர்கள் என்றால் இந்துக்கள் !
பி.கு : அரைகுறையாக புரிந்து கொண்டு நண்பர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம். இப்பெல்லாம் தேசியம் பற்றி பேசுவதுதான் டிரெண்ட் அது என்ன மாதிரி தேசீயம் என்று சொல்ல முயன்றேன்.
குறிசொற்கள்
அனைத்தும்,
இந்திய தேசியம்,
கவிதைகள்
Monday, March 26, 2007
காதல் கிறுக்ஸ் 1

போதை பொருள் !
ஒரே ஒரு பார்வையில்
அப்படியே மயங்கினேன்,
போதைப் பொருள்
வைத்திருந்த குற்றத்திற்காக
உன்னை என்
இதய சிறையில்
அடைக்கிறேன் !
பின்குறிப்பு : அருட்பெருங்கோ மன்னிப்பாராக :)
Thursday, March 15, 2007
உன்னால் தானே வாழ்கிறேன் !
நீ அழும்போது அழுகிறேன்,
சிரிக்கும் போது சிரிக்கிறேன்.
உறவுகள் அனைத்தாகவும்
உன்னைத்தான் பார்க்கிறேன்
மூன்று வருடங்களாக
உன் முகம் பார்த்து மகிழ்கிறேன்
என்னை இயக்கும்
ரிமோட் கண்ட்ரோல் நீ !
உன் ரகசியங்கள் அனைத்தும்
எனக்கு சொல்கிறாய் !
உனக்கு மின்சாரம் இல்லை என்றால்
புழுக்கம் எனக்கும் தான் !
சனி, ஞாயிறு காணாமல்
உன்னை நினைத்து ஏங்குகிறேன் !
அடுத்த எபிசோடுக்கு ஆளாகப்
பறக்கிறேன் !
எப்போதும் முடியாதே எனது
அருமை மெகா சீரியலே !
பி.கு : சன் தொலைகாட்சி நேயர்களுக்கு காணிக்கை !
Monday, March 12, 2007
ஆதவனின் காலை வேளை !
இலவச பள்ளி எழுச்சி இசையென
சோலை வனங்களில் பூபாளம் இசைத்தது
புல்லினம் !
தூக்கத்தின் அசதி,
கண்கள் சிவக்க விழித்துக் கொண்டது
விடியல் !
இன்று இதுபோதும் என்று
மின்சாரத்தை நிறுத்திக் கொண்டது
விண்மீன்கள் !
பொன் வண்ண கடல் குளியல்,
பனித்துளிக்குள் முகம் பார்த்து
அலங்கரித்து பொலிவு
பெற்றான் ஆதவன் !
காலை பசியின் உணவாக
கடற்கரை மணல் புட்டுக்களின்
ஈரங்களை உண்ணத் தொடங்கி,
பூக்களின் வியர்வையை
அருந்தியதும் உற்சாகமாக
அன்றைய வேலையை
ஆரம்பித்தான் ஆதவன் !
சோலை வனங்களில் பூபாளம் இசைத்தது
புல்லினம் !
தூக்கத்தின் அசதி,
கண்கள் சிவக்க விழித்துக் கொண்டது
விடியல் !
இன்று இதுபோதும் என்று
மின்சாரத்தை நிறுத்திக் கொண்டது
விண்மீன்கள் !
பொன் வண்ண கடல் குளியல்,
பனித்துளிக்குள் முகம் பார்த்து
அலங்கரித்து பொலிவு
பெற்றான் ஆதவன் !
காலை பசியின் உணவாக
கடற்கரை மணல் புட்டுக்களின்
ஈரங்களை உண்ணத் தொடங்கி,
பூக்களின் வியர்வையை
அருந்தியதும் உற்சாகமாக
அன்றைய வேலையை
ஆரம்பித்தான் ஆதவன் !
Subscribe to:
Posts (Atom)