Wednesday, April 11, 2012

தமிழ்மணம் கருவிபட்டை

சற்றுமுன் பெரிய நில அதிர்வு (8.9) - சுனாமி வாய்ப்புள்ளது !

நான் சற்று முன் அலுவலகத்தில் எனது இருக்கையில் அமர்ந்திருந்த போது நில அதிர்வை உணர்ந்தேன், உடனேயே நில அதிர்வின் இடம் குறித்து தகவலை http://earthquake.usgs.gov தேட கிடைக்கவில்லை, அதன் பிறகு நான்கு நிமிடங்களில் காட்டியுள்ளனர்

நில அதிர்வின் அளவு : 8.9 M,

வங்காளவிரிகுடாவை உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடலில் OFF THE WEST COAST OF NORTHERN SUMATRA கடற்பகுதியில் நடந்துள்ளது,

இந்தப் பகுதி இந்தியா, இலங்கை கிழக்கு கடற்கரை முகமாகவும் அந்தமான் தீவு பகுதியை உள்ளடக்கியதாகவும் உள்ளதால், 8.9 M நில அதிர்வின் அளவைப் பார்க்க சுனாமிக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தகவலை உடனடியாக நண்பர்களிடம் பகிர்ந்து கடற்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளுங்கள்

சுனாமி ஏற்படும் இடங்கள் :


Tsunami InformationEarthquake Information
Message Time:11 Apr 2012 08:45 UTC
Message Num:1
Message Text:click to read
Message Type:Indian Ocean-wide Tsunami Watch Bulletin
Warning:none
Watch:Indonesia, India, Sri Lanka, Australia, Myanmar, Thailand, Maldives, United Kingdom, Malaysia, Mauritius, Reunion, Seychelles, Pakistan, Somalia, Oman, Madagascar, Iran, Uae, Yemen, Comores, Bangladesh, Tanzania, Mozambique, Kenya, Crozet Islands, Kerguelen Islands, South Africa, Singapore
Tsunami Messages for the Indian Ocean (Past 30 days)





Earthquake Details

  • This event has been reviewed by a seismologist.
Magnitude8.7
Date-Time
  • Wednesday, April 11, 2012 at 08:38:38 UTC
  • Wednesday, April 11, 2012 at 02:38:38 PM at epicenter
Location2.348°N, 93.073°E
Depth33 km (20.5 miles)
RegionOFF THE WEST COAST OF NORTHERN SUMATRA
Distances
  • 431 km (268 miles) SW (216°) from Banda Aceh, Sumatra, Indonesia
  • 962 km (598 miles) W (265°) from KUALA LUMPUR, Malaysia
Location Uncertaintyhorizontal +/- 14 km (8.7 miles); depth +/- 2.8 km (1.7 miles)
ParametersNST=243, Nph=243, Dmin=514.3 km, Rmss=1.67 sec, Gp= 36°,
M-type=regional moment magnitude (Mw), Version=8
Source
  • Magnitude: USGS NEIC (WDCS-D)
    Location: USGS NEIC (WDCS-D)
Event IDusc000905e


TSUNAMI BULLETIN NUMBER 001
PACIFIC TSUNAMI WARNING CENTER/NOAA/NWS
ISSUED AT 0845Z 11 APR 2012

THIS BULLETIN IS FOR ALL AREAS OF THE INDIAN OCEAN.

... AN INDIAN-OCEAN-WIDE TSUNAMI WATCH IS IN EFFECT ...

A TSUNAMI WATCH IS IN EFFECT FOR

 INDONESIA / INDIA / SRI LANKA / AUSTRALIA / MYANMAR / THAILAND /
 MALDIVES / UNITED KINGDOM / MALAYSIA / MAURITIUS / REUNION /
 SEYCHELLES / PAKISTAN / SOMALIA / OMAN / MADAGASCAR / IRAN /
 UAE / YEMEN / COMORES / BANGLADESH / TANZANIA / MOZAMBIQUE /
 KENYA / CROZET ISLANDS / KERGUELEN ISLANDS / SOUTH AFRICA /
 SINGAPORE

THIS BULLETIN IS ISSUED AS ADVICE TO GOVERNMENT AGENCIES.  ONLY
NATIONAL AND LOCAL GOVERNMENT AGENCIES HAVE THE AUTHORITY TO MAKE
DECISIONS REGARDING THE OFFICIAL STATE OF ALERT IN THEIR AREA AND
ANY ACTIONS TO BE TAKEN IN RESPONSE.

AN EARTHQUAKE HAS OCCURRED WITH THESE PRELIMINARY PARAMETERS

 ORIGIN TIME -  0839Z 11 APR 2012
 COORDINATES -   2.0 NORTH   92.5 EAST
 LOCATION    -  OFF W COAST OF NORTHERN SUMATRA
 MAGNITUDE   -  8.7

EVALUATION

 EARTHQUAKES OF THIS SIZE HAVE THE POTENTIAL TO GENERATE A
 WIDESPREAD DESTRUCTIVE TSUNAMI THAT CAN AFFECT COASTLINES ACROSS
 THE ENTIRE INDIAN OCEAN BASIN.

 HOWEVER - IT IS NOT KNOWN THAT A TSUNAMI WAS GENERATED.  THIS
 WATCH IS BASED ONLY ON THE EARTHQUAKE EVALUATION. AUTHORITIES IN
 THE REGION SHOULD TAKE APPROPRIATE ACTION IN RESPONSE TO THE
 POSSIBILITY OF A WIDESPREAD DESTRUCTIVE TSUNAMI.

ESTIMATED INITIAL TSUNAMI WAVE ARRIVAL TIMES AT FORECAST POINTS
WITHIN THE WARNING AND WATCH AREAS ARE GIVEN BELOW. ACTUAL
ARRIVAL TIMES MAY DIFFER AND THE INITIAL WAVE MAY NOT BE THE
LARGEST. A TSUNAMI IS A SERIES OF WAVES AND THE TIME BETWEEN
SUCCESSIVE WAVES CAN BE FIVE MINUTES TO ONE HOUR.

 LOCATION         FORECAST POINT     COORDINATES     ARRIVAL TIME
 --------------------------------    ------------    ------------
 INDONESIA        SIMEULUE            2.5N  96.0E    0921Z 11 APR
                  BANDA_ACEH          5.5N  95.1E    0931Z 11 APR
                  SIBERUT             1.5S  98.7E    0941Z 11 APR
                  PADANG              0.9S 100.1E    1017Z 11 APR
                  BENGKULU            3.9S 102.0E    1038Z 11 APR
                  CILACAP             7.8S 108.9E    1205Z 11 APR
                  BANDAR_LAMPUNG      5.7S 105.3E    1213Z 11 APR
                  BALI                8.7S 115.3E    1253Z 11 APR
                  KUPANG             10.0S 123.4E    1338Z 11 APR
                  BELAWAN             3.8N  98.8E    1348Z 11 APR
                  BALI                8.7S 115.3E    1253Z 11 APR
 INDIA            GREAT_NICOBAR       7.1N  93.6E    0937Z 11 APR
                  LITTLE_ANDAMAN     10.7N  92.3E    1016Z 11 APR
                  PORT_BLAIR         11.9N  92.7E    1032Z 11 APR
                  NORTH_ANDAMAN      13.3N  92.6E    1052Z 11 APR
                  CHENNAI            13.4N  80.4E    1127Z 11 APR
                  KAKINADA           17.2N  82.7E    1205Z 11 APR
                  TRIVANDRUM          8.3N  76.9E    1208Z 11 APR
                  MANGALORE          13.3N  74.4E    1336Z 11 APR
                  BOMBAY             18.8N  72.6E    1608Z 11 APR
                  GULF_OF_KUTCH      22.7N  68.9E    1634Z 11 APR
 SRI LANKA        DONDRA_HEAD         5.9N  80.6E    1039Z 11 APR
                  TRINCOMALEE         8.7N  81.3E    1051Z 11 APR
                  COLOMBO             6.9N  79.8E    1120Z 11 APR
                  JAFFNA              9.9N  80.0E    1231Z 11 APR
 AUSTRALIA        COCOS_ISLAND       12.1S  96.7E    1045Z 11 APR
                  NORTH_WEST_CAPE    21.5S 113.9E    1314Z 11 APR
                  CAPE_INSPIRATIO    25.9S 113.0E    1413Z 11 APR
                  PERTH              32.0S 115.3E    1420Z 11 APR
                  AUGUSTA            34.3S 114.7E    1440Z 11 APR
                  GERALDTOWN         28.6S 114.3E    1459Z 11 APR
                  CAPE_LEVEQUE       16.1S 122.6E    1506Z 11 APR
                  ESPERANCE          34.0S 121.8E    1615Z 11 APR
                  KINGSTON_SOUTH_    37.0S 139.4E    1748Z 11 APR
                  HEARD_ISLAND       54.0S  73.5E    1802Z 11 APR
                  EUCLA_MOTEL        31.8S 128.9E    1836Z 11 APR
                  HOBART             43.3S 147.6E    1901Z 11 APR
                  DARWIN             12.1S 130.7E    1935Z 11 APR
 MYANMAR          CHEDUBA_ISLAND     18.9N  93.4E    1149Z 11 APR
                  CHEDUBA_ISLAND     18.9N  93.4E    1149Z 11 APR
                  PYINKAYAING        15.9N  94.3E    1150Z 11 APR
                  SITTWE             20.0N  92.9E    1226Z 11 APR
                  MERGUI             12.8N  98.4E    1316Z 11 APR
                  YANGON             16.5N  96.4E    1507Z 11 APR
 THAILAND         PHUKET              8.0N  98.2E    1118Z 11 APR
                  KO_PHRA_THONG       9.1N  98.2E    1223Z 11 APR
                  KO_TARUTAO          6.6N  99.6E    1256Z 11 APR
 MALDIVES         GAN                 0.6S  73.2E    1137Z 11 APR
                  MINICOV             8.3N  73.0E    1210Z 11 APR
                  MALE                4.2N  73.6E    1211Z 11 APR
 UNITED KINGDOM   DIEGO_GARCIA        7.3S  72.4E    1153Z 11 APR
 MALAYSIA         GEORGETOWN          5.4N 100.1E    1311Z 11 APR
                  PORT_DICKSON        2.5N 101.7E    1810Z 11 APR
 MAURITIUS        PORT_LOUIS         20.0S  57.3E    1455Z 11 APR
 REUNION          ST_DENIS           20.8S  55.2E    1512Z 11 APR
 SEYCHELLES       VICTORIA            4.5S  55.6E    1516Z 11 APR
 PAKISTAN         GWADAR             25.1N  62.4E    1536Z 11 APR
                  KARACHI            24.7N  66.9E    1644Z 11 APR
 SOMALIA          CAPE_GUARO         11.9N  51.4E    1539Z 11 APR
                  HILALAYA            6.4N  49.1E    1540Z 11 APR
                  MOGADISHU           2.0N  45.5E    1558Z 11 APR
                  KAAMBOONI           1.5S  41.9E    1623Z 11 APR
 OMAN             MUSCAT             23.9N  58.6E    1540Z 11 APR
                  SALALAH            16.9N  54.1E    1547Z 11 APR
                  DUQM               19.7N  57.8E    1556Z 11 APR
 MADAGASCAR       ANTSIRANANA        12.1S  49.5E    1544Z 11 APR
                  TOAMASINA          17.8S  49.6E    1551Z 11 APR
                  MANAKARA           22.2S  48.2E    1610Z 11 APR
                  MAHAJANGA          15.4S  46.2E    1653Z 11 APR
                  CAP_STE_MARIE      25.8S  45.2E    1713Z 11 APR
                  TOLIARA            23.4S  43.6E    1733Z 11 APR
 IRAN             GAVATER            25.0N  61.3E    1546Z 11 APR
 UAE              FUJAIRAH           25.1N  56.4E    1621Z 11 APR
 YEMEN            AL_MUKALLA         14.5N  49.2E    1626Z 11 APR
                  ADEN               13.0N  45.2E    1726Z 11 APR
 COMORES          MORONI             11.6S  43.3E    1644Z 11 APR
 BANGLADESH       CHITTAGONG         22.7N  91.2E    1651Z 11 APR
 TANZANIA         LINDI               9.8S  39.9E    1659Z 11 APR
                  DAR_ES_SALAAM       6.7S  39.4E    1732Z 11 APR
 MOZAMBIQUE       CABO_DELGADO       10.7S  40.7E    1701Z 11 APR
                  ANGOCHE            15.5S  40.6E    1720Z 11 APR
                  QUELIMANE          18.0S  37.1E    1841Z 11 APR
                  MAPUTO             25.9S  32.8E    1959Z 11 APR
                  BEIRA              19.9S  35.1E    2016Z 11 APR
 KENYA            MOMBASA             4.0S  39.7E    1706Z 11 APR
 CROZET ISLANDS   CROZET_ISLANDS     46.4S  51.8E    1733Z 11 APR
 KERGUELEN ISLAN  PORT_AUX_FRANCA    49.0S  69.1E    1815Z 11 APR
 SOUTH AFRICA     PRINCE_EDWARD_I    46.6S  37.6E    1907Z 11 APR
                  DURBAN             29.8S  31.2E    1910Z 11 APR
                  PORT_ELIZABETH     33.9S  25.8E    2006Z 11 APR
                  CAPE_TOWN          34.1S  18.0E    2109Z 11 APR
 SINGAPORE        SINGAPORE           1.2N 103.8E    2351Z 11 APR

ADDITIONAL BULLETINS WILL BE ISSUED BY THE PACIFIC TSUNAMI
WARNING CENTER FOR THIS EVENT AS MORE INFORMATION
BECOMES AVAILABLE.

THE JAPAN METEOROLOGICAL AGENCY MAY ISSUE ADDITIONAL INFORMATION
FOR THIS EVENT. IN THE CASE OF CONFLICTING INFORMATION...THE
MORE CONSERVATIVE INFORMATION SHOULD BE USED FOR SAFETY.



மேல் விவரங்களுக்கு 

Monday, April 09, 2012

தமிழ்மணம் கருவிபட்டை

கருவி பட்டை இல்லாமல் வாக்குப் போடுவது எப்படி ?

எந்த தொழில் நுட்பத்தையும் குறுக்குவழியில் வளைத்து சாதித்துக் கொள்வதாக நினைக்கும் கூட்டம் உண்டு, அது இங்கு தமிழ் மணம் திரட்டியில் இணைக்கும் பதிவுகளிலும் குழுவாக தொடர்ந்து நடந்துவருகிறது. 

குறிப்பிட்ட பதிவில் தமிழ்மணம் கருவிப்பட்டை இருக்காது ஆனால் மிகுதியான வாக்குகள் விழுந்துள்ளதாக 'வாசகர் பரிந்துரை' பகுதியில் காட்டும், அந்த குறிப்பிட்ட பதிவினுள் நுழைந்து தேடினால் நமக்கு தமிழ்மணம் கருவி பட்டை தென்படாது, நம்மால் எதிர்த்து வாக்களிக்கவோ முடியாது. குறிப்பாக எதிர்வாக்குகளை தடுத்து 'மகுடம் சூட்டிக் கொள்ள' தந்திரம் செய்பவர்களின் 'சிறு மூளையின்' வேலை தான் இது.

இந்த குறுக்கு வழியை எப்படி கையாள்கிறார்கள் என்று பார்ப்போம்.

  • தமிழ் மணத்தில் ஏற்கனவே இணைந்துள்ளப் பதிவர்கள் வாக்களிக்கும் அல்லது பதிவுகளை தமிழ்மணத்தில் அளிக்கும் 'தமிழ் மண கருவிப்பட்டை வைத்திருப்பார்கள். கருவிப்பட்டை இருந்தால் நேரடியாக அதில் அழுத்தி தமிழ்மணத்தில் சேர்க்க முடியும். கூடவே ஆதரவு எதிர்ப்பு வாக்குகளுக்கான 'கை'கள் அங்கிருக்கும்.
  • குறுக்குவழியாளர்கள் இந்த கருவிப்பட்டையை தங்களது பதிவு டெம்ளேட்டில் இருந்து நீக்கிவிடுவார்கள். அதன் பிறகு எழுதிய பதிவை நேரடியாக தமிழ்மணத்தில் 'இடுகைகளை புதுப்பிக்க' என்னும் இடத்தில் சுட்டியாக (URL) கொடுத்து இணைத்துவிடுவார்கள்.
  • தமிழ் மணத்தில் இணைத்த பதிவுகள் ஒவ்வொன்றிற்கும் தமிழ்மணம் தனித் தனி பதிவு எண் ஒன்றை கொடுக்கும். பதிவை தமிழ்மணத்தில் சேர்த்த பிறகு தமிழ்மண முகப்பில் அந்த பதிவின் மீது மவுசை ஓட்டினால் தமிழ்மணத்தில் அந்த இடுகையின் பதிவெண் கிடைக்கும். (மேலே படம் பார்க்க) அதை எடுத்து வாக்களிக்கும் சுட்டியாக மாற்றிக் கொள்வதன் மூலம் வாக்குகளை கருவிப்பட்டை இல்லாமல் அளிக்க முடியும். இவ்வாறு உருவாக்கப்படும் சுட்டிகளை நண்பர்களுக்கு மின் அஞ்சல் / சாட் / குழும அஞ்சல் வழியாக அனுப்பி 'என்னுடை பதிவுக்கு ஓட்டு போட்டுவிடுங்கள்' என்று வேண்டுகோள் வைப்பார்கள். 
இப்போது ஒரு உதாரணம் பார்ப்போம்,

உண்மையை நோக்கி ஒரு பயணம்... - அன்னு என்பவர் ஒருவரின் பதிவில் தமிழ்மணம் கருவிப்பட்டை இல்லை, ஆனாலும் அந்தப் பதிவு வாசகர் பரிந்துரைப் பகுதியில் 12 வாக்குகள் பெற்றதாகக் காட்டுகிறது. இவருடைய அந்தப் பதிவிற்கு தமிழ்மணம் கொடுத்திருக்கும் பதிவு எண் : 1154152. அவருக்கு நேர் அல்லது எதிர் வாக்குகளை நீங்கள் செலுத்த விரும்பினால் 

http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1154152
http://tamilmanam.net/rpostrating.php?s=N&i=1154152

பின்குறிப்பு : நான் அவருக்கு(அன்னுவுக்கு) ஆதரவாக / எதிராக வாக்களிக்கச் சொல்லி சுட்டிக் கொடுக்கவில்லை, உதாரணத்திற்குக் காட்டியுள்ளேன், தவிர அன்னு என்பவர் இப்படித்தான் செய்துள்ளாரா வேற வழி வைத்திருக்கிறாரா என்றும் எனக்கு தெரியாது. நட்சத்திர வாரத்தில் இது போன்றப் பதிவுகளை காலம் பதிவில் எழுத வேண்டாம் என்பதால் இதில் எழுதுகிறேன், இது நட்சத்திரப் பதிவும் அல்ல. ஒரு விழிப்புணர்வு பதிவு மட்டுமே. எதிர்வாக்குகள் முடக்கப்பட்ட பதிவுகளில் நீங்களே அந்தப் பதிவுகளின் தமிழ்மணப் பதிவு எண்ணை (மேற்கண்டவாறு) சுட்டியாக அமைத்து உலவியின் முகவரியில்  செலுத்தி வாக்களிக்க முடியும்.

Tuesday, March 20, 2012

தமிழ்மணம் கருவிபட்டை

கூடங்குளம் !


மயானங்கள் மனிதர்களுக்காக
மனிதர்களால் கட்டப்படுபவை தானே !

மின்சாரப் பஞ்சம் இனி இல்லவே இல்லையாம்,
மயானங்களுக்கு மட்டுமல்ல,
மனிதர்களுக்கும் சேர்த்தே,
திறக்கப்படும் மாபெரும் மின்சார சுடுகாடு !

Wednesday, March 14, 2012

தமிழ்மணம் கருவிபட்டை

நான் நம்பிக்கையாளன், ஆத்திகன் !

சக்தியுள்ள கடவுள் எது ? லாபம் தரும் கடவுள் எது ?
என்கிற எனது "கடவுள்" நம்பிக்கையில்
அவர்களது "கடவுள்" நம்பிக்கைகளை
நான் சேர்த்துக் கொள்வது கிடையாது
நான் என்னை "கடவுள்" நம்பிக்கையாளன் என்று
வெட்கமில்லாமல் கூறிக் கொள்வதில்
பெருமை படுகிறேன்.

நான் ஒரு கிறித்துவனாக இருந்தால்
மசூதிகள், கோவில்களின் கடவுளரை புறக்கணிப்பேன்

நான் ஒரு இஸ்லாமியனாக இருந்தால்
தேவாலயங்களும் கோவில்களும் சிலை வணங்கிகளின்
அபத்தங்கள் என்பேன்

நான் ஒரு இந்துவாக இருந்தால் என் நம்பிக்கைக்குரிய
ஆயிரம் சாமிகளில் அல்லாவும், ஜொஹோவாவிற்கும்
இடமில்லை என்பேன்

"எல்லாம் அவன் செயல்" "அவனே அனைத்தும் அறிவான்"
என்ற எனது திடமான நம்பிக்கைகளுள்
மாற்று மதங்களுக்கும், அவர்கள் தம் கடவுளரும்
அடங்காது. ஆனால் அவர்களையும்
எனது கடவுளே ஆளுமை செலுத்துகிறார், அழிக்க விரும்புகிறார்
என்ற என் நம்பிக்கையில் மாற்றமே இல்லை.

நம்புங்கள் நான் ஆத்திகன்... ஆத்திகன்
என்னுடைய கொள்கை சார்ந்த "கடவுள்" மட்டுமே
உண்டு என்பேன். கூடவே
"கடவுள்" நம்பிக்கையற்றவர்களை
நக்கல் அடிப்பவன் நான்.

"கடவுள் இல்லை" என்பவன் சிந்திக்க மறுப்பவன் அவன்
"நரக நெருப்பில் வாடுபவன்",
"உண்டு" என்று கடவுள் புகழ்பாடும் நான் "ஆசிர்வதிக்கப்பட்டவன், சொர்கவாசி
ஆகப்போகிறவன்"



**********

போங்கைய்யா நீங்களும் உங்க போங்கு ஆட்டமும்

அன்புடன் கோவியார்

Thursday, September 08, 2011

தமிழ்மணம் கருவிபட்டை

காணமல் போன சொற்கள் !


நம் உரையாடல்கள் அனைத்தையும்
அலைபேசிகள் தின்று தீர்ந்துப் போனபின்
நம் திருமணம் நடந்ததா ?

இன்றும் தான் பேசுகிறோம்
'சரி' என்ற ஒற்றைச் சொற்களால்
முடிந்துவிடுகிறதே நம் உரையாடல்கள் !

Friday, June 18, 2010

தமிழ்மணம் கருவிபட்டை

ஹைகூ......வுங்க !

சிறகுகளின் பசை !

எண்ணைப் பசை இருந்தும் தண்ணீர் மூழ்கி
எழ முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது பறவைகள் !



மரம் வளர்ப்போம் !

அழிந்த மரங்களின் காகித் கூழ்களில்
அழகான வாசகம் 'மரம் வளர்ப்போம்.....மனிதம் காப்போம்'

குக்கர் விசில் !

குயில் கறி வெந்த குக்கரும்
இனிமையாக விசலடிதது வெந்ததை அறிவிக்க !

அக்டோபர் இரண்டு !

அந்த நாளிலும் டாஸ்மாக் கதவு இடுக்கு வழியாக
கள்ளத்தனமாக நுழைந்தது காந்திப்படம்

அணையும் விளக்கு !

இறப்பின் நொடிகளை துடிப்புகளாக அறிவித்துக்
கொண்டிருந்தது ஒரு சாலை விளக்கு !

சில்லரைத் தனம் !

பிச்சைகாரனிடம் சில்லரை இல்லை என்று கைவிரிக்கக் காரணமான
நூறு ரூபாய் அர்சனைத் தட்டில் விழுந்தது !

Wednesday, March 31, 2010

தமிழ்மணம் கருவிபட்டை

பெரியார் தாசன் ஆனதென்ன அப்துல்லா !


நாத்திகன்

ஆத்திகன் ஆனான்

முதலில்

புத்தனாக, பின்

இஸ்லாமியனாக, இந்(து)த

ஆத்திகர்கள் மகிழ்ந்ததாகத்

தெரியவில்லை.

பிறகு ஏன் நாத்திகன் மீதான வெறுப்பு ?

இங்கே

கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம்

வெறும் மதமும், மதம் சார்ந்த

நம்பிக்கைகள் மட்டுமே...

என்பதற்கு மற்றொரு சான்று

பெரியார் தாசன் !

Thursday, December 03, 2009

தமிழ்மணம் கருவிபட்டை

பிறப்பும் இறப்பும் !


குறை,
அறுவை,
வலி,
சுகம்,
தாயின் மகப்பேறு போலவே
மரண வேளைகள்,
நோய்,
விபத்து,
வலி,
ஓய்வு என்பதாக
நிகழ்ந்து கொண்டிருக்கிறது !

Monday, October 12, 2009

தமிழ்மணம் கருவிபட்டை

தாய்மை !



அப்பாவுக்கு மகிழ்வுடன்
"டாடா" காட்டும்
எந்த ஒரு குழந்தையும்,
அம்மாவுக்கு
"டாடா" காட்டும் போது
மட்டுமே அழுகின்றது.

Sunday, August 02, 2009

தமிழ்மணம் கருவிபட்டை

நண்பர்கள் நன்னாள் கவிஜை !

நன்றாகப் படிக்கிறேன் கவலைப்படாதிங்க,

சீக்கிரம் வேலை கிடைச்சிடும் கவலைப்படாதிங்க,

உடம்புக்கு ஒண்ணும் இல்லை அனத்தாதீர்கள்,

என்றெல்லாம் உறவுகளிடம் சொன்னாலும்

படிக்கவே பிடிக்கவில்லை,

வேலைத் தேடுவது கஷ்டமாக இருக்கிறது,

மனசும் சரி இல்லை,

உடம்பும் சரி இல்லை

என்ற உண்மைகளுடன்,

பருவச் சீற்றத்தின் தணிப்புக்காக

அங்கு சென்று வந்ததிலிருந்து

"அங்கு" எரிகிறது என்று நண்பனிடம் தான் சொல்லமுடிகிறது.

- அன்புடன்
கோவியார்.

பின்குறிப்பு : யூசுப் பால்ராஜ் ஐயங்கார், கீழ்கண்ட படத்துடன் கவிஜையை மொக்கை மின் அஞ்சலில் அனுப்ப, எனக்குள்ள தூங்கிக்கொண்டு இருந்த கவிஜன் விழித்துக் கொண்டான்.

Wednesday, July 29, 2009

தமிழ்மணம் கருவிபட்டை

கருமையின் நிறம் !


ஆரவாரமற்ற இருட்டில்
தனிமை சூழ்ந்த ஒற்றையடிப் பாதையில் நடந்தபடி
முற்றும் துறந்த மனதுடன்
சுற்றும் முற்றும் பார்க்கிறேன்.

காய்ந்த மனதில்,
பொறுக்கி வைத்த சுள்ளிகளாக
கடந்து போன நினைவுகளின்
தீப் பிடித்து எரிந்து மீந்த சாம்பலாக
கடந்த காலம்

பாழடைந்த கிணற்றின்
சிதலமடைந்த சுவற்றின் விழாத நம்பிக்கையில்
பெருந்துளையில் வளர்ந்து கொண்டிருந்த
ஆல விருட்ச எண்ணங்கள்

மழை நேரத்தில் கரைந்தொழுகும்
புற்றின் ஈரமணலில் நெளிந்து துடிக்கும்
கரையான்களின் கடைசி நேர முயற்சியாக
துடித்துக் கொண்டிருந்த என் மனதில்

இதற்கும் மேல் பின் நவீனத்துவக் கவிதை
எப்படி எழுதவேண்டும் என்று தெரியாததால்
வெயில் காலத்து ஆற்று நடுமுதுகின் பதிந்த மணல்களை
பேய்காற்று பீய்த்தெரிந்து வரண்ட திட்டாக்கும் திட்டத்துடன்
ஒவ்வொரு முடிகளாக பிய்த்துக் கொண்டிடிருந்தது
விரல்கள் !

- இது கவிஜையான்னு கேட்கிறவங்க...முதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்க... தலைப்புக்கும் கவிஜைக்கும் என்ன தொடர்ப்புன்னு சொல்லுங்க...எனக்கு தெரியவில்லை :)

Thursday, May 07, 2009

தமிழ்மணம் கருவிபட்டை

பட்டையைக் கிளப்பும் ஜெ, பதுங்கும் திமுக கூட்டணி

கத்திரி வெயிலில் மேலும் சூட்டைக் கிளப்பும் வகையில் ஜெ வின் பேச்சும் தேர்தல் பரப்புரை பயணமும் அமைந்திருக்கிறது. கட்சி சாராது திமுக அனுதாபிகளாக இருந்த (என்போன்றோர்கள்) ஜெ வின் பேச்சை வெகுவாக ரசிக்கின்றனர். திமுகவின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க ஜெ-வால் தான் முடியும் என்கின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டச் சிறப்புகளைச் சொல்லிவிட்டு, அந்த மாவட்டத்தில் அதிமுக காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைச் சொல்லி, திமுகவின் மீதும் தமிழக திமுக கூட்டணி தலைவர் மீது சரமாரி ஏவுகனைக் குற்றச் சாட்டு தாக்குதல் தொடுக்கிறார். 'மக்களை சந்திக்க பயந்து போய் மருத்துவ மனையில் படுத்துக் கொண்டார் கருணாநிதி, கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி ஓய்வு கொடுங்கள் ' என்கிற ஜெவின் அட்டாக் திமுகவினரை பெரிதாகவே தாக்கி இருப்பது ஸ்டாலின் 'நாகரீகமற்றவராக பேசுகிறார் ஜெ' என்ற பதில் பேச்சில் தெரிகிறது.

தேர்தல் பரபரப்பில் பரப்புரை (பிரச்சார) பயணம் செய்வதில் பிறகட்சியினரைக் காட்டிலும் ஜெ மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். கருணாநிதி காங்கிரசுகாரர்களான காமரசரை 'காமராசரின் வாடகை வீட்டை படம் பிடித்த கருணாநிதி ஏழையின் வீட்டைப் பாரிர் என்று முரசொலியில் படம் போட்டு அவமானப்படுத்தினார், பக்தவச்சலத்தை பத்துலட்சம் பக்தவச்சலம்' என்று சொன்னார்' என்று காங்கிரசையும் திமுகவையும் பற்ற வைத்தார் ஜெ, வழக்கமாக கருணாநிதி மட்டுமே பழசை கிண்டி கிண்டி பேசுவார். ஜெவின் ஈழம் பற்றி தெளிவான பேச்சு பலரைக் கவர்ந்திருக்கிறது

ஜெ-வின் தேர்தல் உத்தி சிறப்பாகவும் கவனம் ஈர்பாகவும் இருப்பதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். திமுக திணருவதைப் பார்க்கும் போது கட்சி சார்பில்லாமல், தொண்டராக இல்லாமல் இருக்கும் திமுக அனுதாபிகள் திமுகவின் நிலை குறித்து பரிதாபப்படுகின்றனர். நானும் தான் :)
ஜெ என்றால் வெற்றி என்று மீண்டும் நிருபணம் செய்துவிடுவார் என்று நன்றாகவே தெரிகிறது.

கருணாநிதி கர்ணனாக இருந்தாலும் கூட்டு சேர்ந்தது துரியோதனர்களிடம் என்பதால் தற்போதைக்கு திமுக கூட்டணி பற்றி அனுதாபம் மட்டுமே படமுடிகிறது. சோனியா தமிழக (காங்கிரஸ் மற்றும் திமுக) ஆதரவை பெரிதாக கணக்கிட்டுக் கொள்ளவில்லை, எனவே தேர்தலுக்கு பிறகு திமுகவை கழட்டிவிடுவது கிட்ட தட்ட உறுதியாகிவிட்டதாக சோனியாவின் தமிழக பரப்புரை பயணம் நிறுத்தப்பட்டதை வைத்து பார்வையாளர்கள் கூற ஆரம்பித்துவிட்டார்கள்.

ஜெ... ஜெ... என தமிழுணர்வாளர்களை இந்த தேர்தல் முடிவு உற்சாகப்படுத்தும் என்று தெரிகிறது.

(தேர்தல் முடிவு மட்டும் தானா உற்சாகப்படுத்தும் அதன் பிறகுமா ? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்)

Thursday, March 26, 2009

தமிழ்மணம் கருவிபட்டை

தேர்தல் உடன்படிக்கை !

தேர்தல் வந்துவிட்டது,
எந்த அலையும் வீசவில்லை
என்கிறார் முதல்வர்
விலைபோகும் அளவுக்கு
இடைத் தேர்தல் அல்லதான் !

இலவச வலைகளால்
உங்களுக்கே வாக்குகள் கிடைக்கலாம்,
இன்னும் கூட வாக்குக்கு வழியுண்டு,

ஈழவர்களின் நலனுக்கு தீக்குளித்த
கட்சிக்காரர்களின் கருகிய படம் இருந்தால்
ஆளுக்கு 4 தொகுதிகள்
ஆளும் கட்சிக்கு கூட்டணிக்கு கிடைக்கலாம் !

தேர்தல் உடன்படிக்கைபடி
முத்துக்குமாரின் படம் யாருடைய
பிரச்சாரத்துக்கு என்கிற கேள்விக்கு
யாருக்கும் இன்னும் விடைதெரியவில்லை !

Friday, December 05, 2008

தமிழ்மணம் கருவிபட்டை

தமிழ்பேச்சுக் கவிஞர்கள் !



வறுமைகள் கூட இவர்கள் வரிகளின் பொற்காசுகள் !
சிறுமைகள் கூட இவர்களின் கவிதை அலங்காரங்கள் !

துன்பவேளையை கவிதை யாழாக இசைப்பவர்கள்,
இன்ப வேளையை கவிதையில் ஏளனம் செய்பவர்கள் !

நாட்டுப்பற்றும் இவர்களால் நக்கல் செய்யப்படும் !
வீட்டுப்பற்றும் இவர்களால் சிக்கல் ஆகிவிடும் !

சோற்றுக்கு வழிதேடாமல் தூற்றலால் பசியாறுவார்கள் !
மாற்றுக்கு துணியில்லாவிட்டாலும் காற்றுக்கு ஆடை தைப்பார்கள் !

நெருப்பு சுடுவதுதான் இயற்கையா ? எங்கள் சொற்களின்,
வெறுப்பு சுடாவிட்டால் நீர் இயற்கை எய்தியவர் என்பர் !

வெடிகுண்டு வெடித்துவிட்டால் வெகுண்டெழு(த) - வரி
அடிகொண்டே அனைத்தையும் அடக்கிவிட நினைப்பர் !

பொடிபோட காசு இல்லை என்றால், தேசம்
அடியோடு வறுமையால் வாடுவதென்பர் !

அரசியல்வாதிகள் நாட்டை கெடுத்துவிட்டர் என்பர், சோம்பியிருந்தே
அரிசிகூட இவர்கள் கவிதையால் வெந்துவிடுமென்பர் !

வரிகளை வரிசை மாற்றிப் போட்டுவிட்டு, போற்றிக் கொடுக்கும்
பரிசுக்கு என் கவிதை பெற வாய்ப்பில்லை என்பர் !

கற்கண்டு இனிப்பதெல்லாம் இனிப்பா ? என்
சொற்கண்டால் அவை வெறும் இளிப்பே என்பர் !

சமூக அவலம் இவர்களின் எழுத்துக்கு தீனி, அதைப் போக்கி
சுமூகமாக்க இவர்கள் இறங்கியிருக்கிறார்களா நானி ?


பின்குறிப்பு : கவிஞர் நெல்லக் கண்ணன் நடத்தும் விஜய் தொலைக்காட்சி தமிழ் பேச்சுக்கும் இந்த கவிதைக்கும் தொடர்ப்பு இல்லை :)

Tuesday, September 16, 2008

தமிழ்மணம் கருவிபட்டை

சிங்கை பதிவர் சந்திப்பு நினைவூட்டல் !

வரும் சனிக்கிழமை மாலை 3 மணி முதல் வீட்டில் இருந்து 'இப்ப வர்றிங்களா இல்லையா ?' என செல்பேசி மிரட்டல் வரும் வரை சிங்கை புக்கிட் கொம்பா எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் பதிவர் சந்திப்பு நடை பெற இருப்பதாக ஏற்கனவே ஜோசப் பால்ராஜ் பதிவில் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

சென்ற முறை சந்திப்புகள் ஞாயிற்றுக் கிழமைகளில் நடந்ததால், ஏன் சனிக்கழைமைக் கூட வைக்கலாமே என கேட்டு கலக குறல்கள் ?:))) எழுந்ததால், இந்த முறை சனிக்கிழமை வைக்கலாம் என்று பதிவர்களால் ஒருமனதாக தீர்மாணிக்கப்பட்டு இருக்கிறது.

இடம் : புக்கிட் கொம்பா எம்ஆர்டி நிலையம்

நேரம் : மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை

சந்திப்பு ஏற்பாட்டாளர்கள் : சிங்கை நாதன் செந்தில் மற்றும் ஜோசப் பால்ராஜ்

சந்திப்பின் கருப்பொருள் : எங்கே செல்லும் பதிவர் பாதை ?

விவாதம் : வலைப்பதிவில் இருந்து ஓய்வு பெறுவது எப்படி ? - வலைப்பதிவாளர் கோவி.கண்ணனின் சிறப்புரையுடன் தொடங்கி வைக்கப்படும்

சந்திப்பின் தீர்மானம் : புதிய பதிவர்களின் எழுத்துக்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்துவது

நிகழ்ச்சி ஆரம்பம் : மாலை 3 மணி
இளைப்பாறுதல் : அவ்வப்போது
தேனீர் இடைவேளை : மாலை 5 மணி

இந்த முறை முந்தைய சந்திப்புகளில் விடுபட்ட பதிவர்கள் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள்:

ஜோசப் பால்ராஜ் : +65 - 93372775
கோவி.கண்ணண் : +65 - 98767586
ஜெகதீசன் : +65 - 90026527

Wednesday, April 23, 2008

தமிழ்மணம் கருவிபட்டை

பூவின் மவுனம் !


பூவின் வாசமோ, வண்ணமோ
எதோ ஒரு ஈர்ப்பில்
பார்த்துக் கொண்டு இருந்த
என்னை அழைத்தது அருகில்,

எல்லாப் பூக்களைப் போலத்தான்
இந்த பூவும் நன்றாக இருக்கிறதே
ஒட்டி உறவாடினேன்
அந்த ரோஜாவுடன் !

நெருங்கிப் பழகியதாலோ என்னவோ
உரிமை எடுத்துக் கொண்டு,
என்னிடம் பழகும் நீ
ஏன் காட்டுப்பூக்களிடம்
பழகுகுறாய் என்று கடிந்து
கொண்டது ரோஜா.

பூவெல்லாமே எனக்கு ஒன்றுதான் !
நான் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும்,
என்னைவிட அந்தபூக்கள்
என்ன உயர்வு உனக்கு ?
கடிந்து கொண்டது ரோஜா !

மீண்டும் சொன்னேன்,
பூக்களெல்லாமே பூக்களே
எந்த பூவும் என்னிடம் பேசினால்
நானும் பேசுவேன் !

நீ பூவென்று நினைப்பது பூவல்ல
பூநாகம், நீ தொடர்ந்து
பழகினால், உன் கூடா ஒழுக்கமாக
உன்னை வெறுப்பதைத் தவிர எனக்கு
வழி இல்லை என்று சொன்னதுமின்றி
முட்களால் என்னைத் தீண்டிவிட்டு மவுனமானது !

வருடிக் கொடுக்கும்
என் விரலில் தீண்டினாலும்
இதயத்தில் தீண்டியதாகவே உணர்ந்தேன்.
நீ மட்டும் என்ன ? நீயும் முட்களால் தீண்டி
காட்டு ரோஜாதான் என காட்டிவிட்டாயே !

அன்பு ரோஜாவே,
பூவில் பூநாகம் இருப்பதெல்லாம் எனக்கு
தெரியாது, என்னைப் பொருத்து
அது நாகலிங்கப் பூதான்,
அந்த பூமட்டுமல்ல,
எந்த பூவும் என்னுடன் பழகினால்
நான் பழகுவேன் !
உன்னுடன் மட்டும் பழகி,
நீ சொல்வதை மட்டும் கேட்கவேண்டும் ?
நீ நினைப்பதை என்னால் நிறைவேற்ற முடியாது !

உன்னை புரிந்து கொள்ள முடியவில்லை,
என்னைத் தீண்டியதில் உதிர்ந்துவிட்ட
உன்முட்களால் ஏற்பட்ட காயம்
உனக்கு வலிக்குமே...
அதற்க்காக நானும் கூட வருந்துகிறேன்.

என்றோ ஒருநாள்,
பூந்தோட்டத்தில் எல்லாப்பூக்களுடன்
நீயும் இருக்க வேண்டும்,
அன்று என்னுடன்
மீண்டும் பேசுவாய் என்றே எதிர்பார்த்து இருப்பேன்,
அன்றுவரை உன்மவுனம் எனக்கு
சம்மதமே !

Monday, March 31, 2008

தமிழ்மணம் கருவிபட்டை

இரவின் மடியில் ... (கவிதை) !



இரவின் மடியில் ... (கவிதை) !

பகலிரவு இரண்டில் இரவையே
நேசிக்கின்றேன் நான் !

இருள் பற்றிய பயம் எனக்கில்லை,
முதன் முதலில் நான் பயந்தது அழுதது
இருட்டைப் பார்த்து அல்ல,
வெளிச்சத்தைப் பார்த்துதான் !

இருள் சூழ் கருவறையில் உறங்கிப்
பிறந்ததன் நினைவோ,
கார்முகிலின் இருளைப் பார்க்கும்
போது கருவறையில் குடியிருந்ததன்
குளுமையை உணர்கிறேன் !

கண்களைக் கவரும்
வெளிச்சத்தின் பகட்டை விட
கலப்பில்லா காரிருளின்
அமைதி மேன்மையானதென்பேன் !

என்னை மறந்து உறங்கும் நேரங்களையும்,
இன்பங்களையும்,
தருவதில் இரவுக்கு சமன் எது ?

எனக்கே எனக்காக பயன்படுத்திக் கொள்ளும்
நேரமென்றால் அது இனிய இரவுதான்.

நான் மட்டுமா ? உயிருள்ளவை
அனைத்தும் உறக்கமும், அமைதியும், ஓய்வும்
பெறுவது இரவின் மடியில் தானே ?

தாயின் மடிபோல் தான் இருளும், ஆடிய
ஆட்டத்தில் அலுப்புடன், உறங்கப் போகும்
என் விழிகள் என்றோ ஒரு நாள்,
இருள் சூழ்ந்து... கண்களை,
அப்படியே ஆசையாக தழுவி அணைத்து,
உறக்கத்தில் ஆழ்த்தி தன் மடியில் கிடத்த,
அமைதி கொள்ளவாய், என
நான் கரைந்து போவதும் அந்த இருளில் தான் !

Friday, March 21, 2008

தமிழ்மணம் கருவிபட்டை

கண்ணாடியின் கறை !



கண்ணாடியின் கறை !

பரண் மேல்,
ஒரு கால் உடைந்த நாற்காலி,
தூசிபடிந்த பழைய புத்தகங்கள்,
காய்ந்த மாலையுடன்
பொட்டு வைக்கப்பட்ட அம்மாவின்
கருப்பு வெள்ளை புகைப்படம்
ரிடையர்ட் ஆன அப்பாவின்
வழியனுப்பு புகைப்படம்,
நான் பட்டம் வாங்கியதும்
பெற்றோர்களுடன் ஆசி வாங்கிய படம்
என என்னைச் சூழ்ந்துள்ள,
பழமைகள் என்றுமே இனிமை
கலந்த
பசுமை நினைவுகள் தான் !

- செந்தூரன்

இதோ இந்த
வார இதழில் பாருங்கள்,
என் பையன்
உயிரோட்டத்துடன் அழகாக
கவிதைகள் எழுத
ஆரம்பித்துவிட்டான்,
பெருமையாகக் கூறிக் கொண்டு
இருந்தார் முதியோர்
இல்லத்தில் இன்னொரு பெரியவரிடம்
ஒரு பெரியவர் !

Wednesday, March 19, 2008

தமிழ்மணம் கருவிபட்டை

தன்மதிப்பும் மற்றும் அடுத்தவரைப் பற்றிய மதிப்பும் !

பெரியார் சொல்லும் சுயமரியாதைப் பற்றியது அல்ல. அது வேறு தன்மானம் தாக்கப்படுவதைப் அனுமதிக்கக் கூடாது என்பது பற்றியது அது. எனக்கு பெரியார் சொல்லும் சுயமரியாதையில் அந்த அளவுக்கு ஈர்ப்பு கிடையாது. பொதுவாக நமக்கு நெருக்கமானவர்களிடம் மரியாதையை சூழல் இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கும் மாறாக தெரியாத ஒருவர் நம்மைப் பற்றி மிகவும் ஆபாசமாக பேசிவிட்டால் அவருடன் எதிர்காலத்தில் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்றால் சட்டை செய்யாமல் சென்று விடுவதே நல்லது. எதிர்வினை ஆற்றுவதால் பயனில்லை.

எனக்கிருக்கும் பழக்கம் நண்பர்களுடன் நெருக்கமானால் அழைப்பை ஒருமைக்கு மாற்றிக் கொள்வது, அவர்களிடம் விண்ணப்பம் வைத்துவிட்டுதான் அதைச் செய்வேன், முன்பு சென்னையில் ஒரு நிறுவனத்தில் என்னுடன் பணியாற்றியவர் நால்வர், அவர்கள் நால்வரும் என் வயதில் 1 அதிகம் அல்லது 1 குறைவாகவே இருந்தார்கள், அவர்களுடன் பழகிய 10 நாட்களுக்கும் அவர்களை ஒருமையில் 'வாடா..போடா' என்று அழைக்க ஆரம்பித்தேன். அவர்களும் என்னை அவ்வாறே அழைத்தார்கள். இதில் கவனிக்கதக்கது என்னவேன்றால் அந்த நால்வரும் என்னைத் தவிர அவர்களுக்குள் ஒருமை விளிப்பை செய்யவில்லை, பெயரைச் சொல்லி 'என்னங்க' 'சொல்லுங்க' என்றே இன்றும் அழைத்துக் கொள்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் ஒத்தவயதினர். நானும் கேட்டுப்பார்த்தேன், எல்லோருமே நெருக்கமாகத்தான் உணருகிறோம், இருந்தாலும் ஒருமை விளிப்பு கூச்சமாகவே இருக்கிறது என்றார்கள்.

ஒருமை விளிப்பு மதிப்பு கொடுக்கிறதா இல்லையா என்பது அவர்களுக்கு நாம் இருக்கும் நெருக்கத்தைப் பொறுத்தே இருக்கிறது, நன்கு தெரிந்தவர்கள் நம்மை ஒருமையில் அழைக்கும் போது இருவருக்கிடையேயான உரிமை, பிணைப்பு என்று தானே அதைச் சொல்ல முடியும், தெரியாத ஒருவர் அல்லது வேண்டுமென்றே நம்மை ஒருமையில் அழைத்தால் அது அங்கே மரியாதைக் குறைவாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது, அழைக்கும் முறை ஒன்றுதான், அழைக்கப்படும் நபர்களின் நோக்கம், நெருக்கம் பொருத்தே ஒருமை விளிப்புகள் பொருள் கொள்ளப்படுகின்றன. உள்நோக்கத்தோடு அவ்வாறு அழைப்பவர்களை பெரிதுபடுத்தத் தேவையில்லை. பதிலுக்கு பதில் நாமும் அவ்வாறு செய்தால் அவர்கள் சொல்லுவதை நாம் மறைமுகமாக ஏற்கிறோம் என்றே பொருள்.

சிறுவயதில் என் பெற்றோர்கள் குறிப்பாக அம்மா என்னை வா போ என்று தான் அழைப்பார்கள், பிறகு 'வாப்பா' 'போப்பா' என்று மாற்றிக் கொண்டார்கள், பிடிக்கவில்லை, வா போ என்றே அழையுங்கள் என்று சொன்னேன். எங்கள் இல்லத்தில் அம்மா அப்பா தவிர அனைவரையும் எங்களுக்குள் உடன்பிறந்தோரை பெயர் சொல்லி ஒருமையில் அழைப்பதுதான் வழக்கம், அண்ணன் என்றால் வா போ ஆனால் வாடா போடா வுக்கு பழகிக் கொள்ளவில்லை, இளைய உடன்பிறப்புகளிடம் கூடவே வாடா போடா என்ற டாவும் இருக்கும், சகோதரிகளை வா போ என்று அழைப்போம் ஆனால் அவள் இவள் வாடி போடி என்று சொன்னது கிடையாது, பெண் குழந்தைகளை எங்களின் உறவினர்களில் அப்பாக்கள் கூட அவள் இவள் டி போட்டு என்று அழைக்க தயக்கம் காட்டுவார்கள், பெண் குழந்தைகளை வாம்மா போம்மா என்பார்கள், மகன்களுக்கு வாடா போடா உண்டு. நான் என் மகளை அழைக்கும் போது வாடி போடி என்று சொல்வதுண்டு, வா போ என்று அஃறிணையில் பெண்குழந்தையை சொல்வதைவிட 'டி' போட்டு அழைப்பது சரியென்றே படுகிறது.

இல்ல உறவுகளைத் தாண்டி நண்பர் வட்டத்தில் மிகவும் நெருக்கமானவர்களை உறவின் பெயரிலேயே அழைக்க ஆரம்பித்துவிடுவேன். அப்பா வயதுடைய நண்பர்களின் அப்பாக்களை அப்பா என்று தான் அழைத்தே வந்திருக்கிறேன். தமிழ் சமூகத்தில் அம்மா வயதுடைய எந்த பெண்ணையும் அம்மா என்று தயங்காமல் அழைப்பது போன்று அப்பாக்களுக்கு அந்த மரியாதைக் கிடைப்பதில்லை. காரணம் எவருடைய குழந்தைக்கும் பால் சுரக்கும் அம்மாவால் பாலுட்ட முடியும், அந்த ஒரு உணர்வு பூர்வ அடிப்படை தகுதி அப்பாக்களுக்கு கிடையாது, அப்படியும் நெருங்கிய ஒருவரை அப்பாவென்று அழைக்க முடியாமல் போவதற்கு காரணம், தனது தாயுடன் தொடர்பு படுத்திக் கொண்டு பார்க்கும் கிழான மனநிலையே காரணம். நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் நண்பர்கள் அனைவருமே அடுத்தவரின் அப்பாவை அப்பா என்றே தயங்காமல் அழைத்தனர். அம்மா அப்பாவின் வயதை ஒத்தவர்களை தாரளமாக அதே உறவின் பெயரில் அழைக்கலாம், நம் அம்மாவின் வயது ஒத்த பெண்களை அம்மா என்று அழைப்பதற்குத் தயக்கம் காட்டாத பலரும், நம் தந்தையின் வயதுடைய ஆண்களை அப்படி அழைப்பதற்கு ஏனோ தயங்குகிறார்கள், ஆண்களை அவ்வாறு 'அப்பா' என்று அழைக்கத் தயங்குவதற்கு, யார் வேண்டுமானாலும் அம்மாவாக இருக்காலாம், ஆனால் அப்பா என்று அழைத்தால் அது பிறப்புடன் தொடர்புடையர் மட்டுமே என்று நினைப்பது ஆண்களை உயர்வுபடுத்துவதாக பொருளா ? பிறரால் அம்மா என்று அழைக்கப்படும் போது எந்த பெண்ணும் அதை உயர்வாகவே நினைக்கிறாள், சமூக பொதுச் சிந்தனையால் ஆண்களுக்கு அத்தகைய உயர்வு கிடைக்காமல் போனது இல்லாதது குறைதான். அவ்வாறில்லாமல் பிறரால் அப்பா என்று அழைக்கப்படும் ஆண்கள் அதை தனது குணநலனுக்கு கிடைத்த உயர்வாக நினைத்து மகிழ்கிறார்கள் என்பது பலருக்கு தெரியவில்லை

வலைப்பதிவு நண்பர்களிடம் நட்பு என்பதைத் தாண்டிய நெருக்கமாக நினைத்து ஒரு சில பதிவர்களை உறவின் பெயராலே அழைக்கிறேன். எனது பின்னூட்டங்களைப் படிக்கும் பதிவர்கள், நான் யார் யாரை அவ்வாறு அழைக்கிறேன் என்று தெரிந்திருக்கும். அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதுபோல் வேறு சிலர் அவர்களாகவே உறவின் பெயர் சொல்லி அழைத்தார்கள், பிறகு விலக்கிக் கொண்டார்கள், நான் அவ்வாறு செய்யச் சொல்லிக் கேட்கவில்லை என்பதால் அவர்கள் முறை மாற்றும் போது 'தன்னால் வந்தது தன்னால் போனது' நட்டமில்லை என்றே நினைத்துக் கொண்டேன்.

நண்பரின் மனைவி நம்மைவிட 10 வயது குறைவாக இருந்தாலும் நண்பரை அழைப்பது போல் நண்பரின் மனைவியையும் ஒருமையில் அழைக்கும் உரிமையை நாமாகவே எடுத்துக் கொள்ளக் கூடாது என்றே நினைக்கிறேன். நான் இதுவரை எந்த நண்பரின் மனைவியையும் அவர் எவ்வளவு இளையராக இருந்தாலும் 'ங்கள்' விகுதி இன்றி அழைத்தது இல்லை.

மதிப்பு குறித்து எழுதத் தொடங்கி நட்பு உறவென்று நீண்டுவிட்டது.

தலைப்பின் மையக் கருத்து இதுதான்,

நீங்கள் நன்கு தெரிந்த ஒருவரை, உங்களுக்கு நெருக்கமான ஒருவரை பொதுவில் திடிரென்று எதோ காரணங்களுக்காக ஒருமையில் தூற்றுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இது 'எதிர்காலத்தில் இது தனக்கும் நடக்கலாம்' என்றே உங்களுக்கு நெருக்கமான பிறர் உங்கள் மதிப்பை உடனடியாக குறைத்துவிடுவார்கள். அது தவிர்க்கவும் முடியாது. மீறியும் நமக்கு நெருக்கமான ஒருவர் தூற்றிவிட்டால் கொஞ்சம் பொறுமையாக அவர்களுக்கு விளக்கலாம், அவர்கள் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை என்றால் அவர்களை விட்டு விலகலாம். அப்படி இல்லாமல் நாமும் எதிர்வினை ஆற்றினால் நாம் அவர்கள் மீது இதுநாள் வரை கோபமாக இருந்ததாக அது வெளிக்காட்டிவிடும், பொது இடத்தில் மரியாதைக் குறைவாக நடப்பவர்களிடம் எதிர்வினை ஆற்றாது நடந்து கொள்வது கோழைத்தனம் அல்ல.
தெரியாத ஒருவர் அல்லது எதிரியாக 'நினைத்துக்' கொண்ட ஒருவர் நம்மைச் சீண்டுவதற்காகவே தாயைத் தரம் தாழ்த்தித் தூற்றுகிறார் என்றால்,அவர் இழிசொல்லுக்கு மதிப்பு கொடுக்காமல் அப்படியே விட்டுவிட்டு வேறு வேலைப்பார்க்கலாம். இதில் இரண்டு அம்மாக்களின் கண்ணியம் காக்கப்படுகிறது


பிறரிடம் நாம் மரியாதையாக நடந்து கொள்வது, நம்மைப் பற்றிய மதிப்பை மறைமுகமாக அவர்களுக்கு உணர்த்துவதுதான். 'இவர் நம்மை மதிப்பதால் இவர் நம் மரியாதைக்குரியவர்' என்றே நினைக்க வைக்கும் அதாவது பிறருக்கு நாம் செய்யும் மரியாதையில் சம அளவு தன் மரியாதையை தற்காத்துக் கொள்வதற்காக அமைந்துவிடுகிறது. மதிப்பு மரியாதை என்பது கொடுத்து (பின்)வாங்குவதல்ல, 'மரியாதை செய்வது' என்பது பிறர்குறித்த மரியாதை தொடர்புடையது மட்டுமல்ல, தன்மரியாதையும் சேர்த்தே அதில் அடங்கி இருக்கிறது.

தன்னை எல்லோரும் மதிக்க வேண்டும் என்று நினைத்தால் அதை காத்துக் கொள்வதில் பெரும்பங்கு நம்மிடையே தான் இருக்கிறது

அன்புடன்,
கோவி.கண்ணன்
தமிழ்மணம் கருவிபட்டை

ஓதுவார் ஆறுமுகசாமி தமிழை உள்ளே அழைத்துச் சென்றார்...நந்தனாரை அழைத்துச் செல்வது யார் ?

சமணமும் பவுத்தமும் முற்றிலும் துடைத்து ஒழித்த பிறகு... தீண்டாமை ஓங்கி இருந்த கிபி 12 ஆம் நூற்றாண்டில், அடியார்களை மெய்சிலிர்க்க வைக்க பெறவும் உடனடி(அவசர) தேவையாகவும் சைவ சமயம் வளர்க்கவும் பக்தி பரவசக் கதைகள் தேவைப்பட்டது. அதற்கு பேருதவி புரிந்தவர் சேக்கிழார் என்னும் பெருமகனார். திருத்தொண்டர் புராணம் என்ற பெயரில் எழுதப்பட்ட பெரிய புராணம் என்னும் சைவ சமய இலக்கியத்தை இயற்றினார். அதன்படி 63 நாயன்மார்கள் கதை புனையப்பட்டது, தமிழகம் முழுவதும் சிவன் கோவில்களில் அந்த ஊரின் தொடர்பில் புனைவுக் கதைகளாக நாயன்மாரில் ஒருவர் வாழ்ந்ததாக 63 கதைகளில் நாயன்மார்கள் பற்றி பெரிய புராணத்தில் எழுதினார் சேக்கிழார்.

கண்ணப்பநாயனார், காரைக்கால் அம்மையார் என 63 அடியார்கள் வாழ்ந்ததாக எழுதி இருக்கிறார். அதில் ஒருவர் தான் தாழ்த்தப்பட்ட புலையர் வகுப்பைச் சேர்ந்த நந்தனார் என்னும் அடியார். நந்தனாரை கதைக்காக பயன்படுத்திக் கொண்டது தவிர அவர்பற்றிய பின்னனி எதையும் சொல்லாமல் குறிப்பாக நந்தனார் வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட புலைப்பாடியைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை என்பதால் சேக்கிழாருக்கு புலையர்வாழ்வு எத்தகையது என்று தெரியவில்லை என்றும், அதற்க்கான காரணம் புலையர் வாழும் ஊர்களை சேக்கிழார் போன்ற பிரமனர் அல்லாத உயர்வகுப்பினரும் எட்டிப்பார்த்ததில்லை என்றும், தில்லைப் போன்ற ஆலயம் அமைந்த ஊர்களை சேக்கிழார் நோக்கத்தின் காரணமாக அளவுக்கு அதிகமாக புகழ்ந்திருக்கிறார் என்றும் பெரியபுராணம் பற்றி ஆய்ந்தவர்கள் எழுதி இருக்கிறார்கள். பதிவின் மையம் தொட்ட கருத்து அல்ல இது.

நந்தனார் வரலாறு பற்றி அனைவரும் அறிந்தது தான், மேலும் நந்தனார் எரிக்கப்பட்டு இறைவனுடன் இரண்டர கலந்ததாகச் சொல்லப்பட்ட கதைகளை பலரும் அறிந்தது தான் அதுபற்றி எதுவும் சொல்வதற்கில்லை. பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ள படி சிவன் கோவிலக்ளி 63 நாயன்மார்களை கோவில் சுற்றில்(பிரகாரம்) வைப்பது ஆகாமவிதிகளில் ஒன்று. நந்தனார் கதை தில்லையில் நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ளதால் நந்தனாருக்கென்றே சிறப்பு சிலையும் வழிபாடும் பாரதி / உவேசாமிநாதய்யர் வாழ்ந்த காலத்தில் இருந்ததாக குறிப்பு இருக்கிறது.

நந்தனார் சிலையை தில்லைவால்(எழுத்து பிழையன்று) அந்தணர்கள் எப்பொழுது அகற்றினார்கள் என்று தெரியவில்லை. கடந்த 65 ஆண்டுகளாக நந்தனாரின் திருவுருவ சிலை தில்லையில் இல்லை. வலைப்பதிவில் இதுபற்றி எவருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன். அண்மையில் தின்னை கட்டுரையைப் படிக்கும் போது அண்ணன் (ஆர்.எஸ்).எஸ் அரவிந்தன் நிலகண்டன் மிகவும் மனம் வருந்தி நந்தனார் (தில்லைவால் அந்தணர்களால்) அகற்றப்பட்டதைக் குறிப்பிட்டு மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், நந்தனார் சிலை இருந்ததற்கான ஆதார அணிவகுப்பையும் கட்டுரையில் வைத்து இருந்தார், பின்பு அதுபற்றி விழிப்புணர்வு கொடுக்க வேண்டாம் என்று நினைத்தாரோ, என்னவோ தெரியவில்லை தின்னையில் அந்த கட்டுரையை காணவில்லை. ஆனால் அதே போன்ற கட்டுரை ஒன்றை மலர்மன்னன் எழுதி முன்பு இருக்கிறார்.

அதில் நந்தனார் சிலை அகற்றப்பட்ட ஆதாரம் தொட்டு குறிப்பிட்டுள்ளவையில் ஒன்று மிகவும் மனம் பாதித்தது

"மகாதேவன் மீண்டும் 1943ல் சிதம்பரம் ஆலயத்திற்குச் செல்கிறார். இப்பொழுது அங்கு

நந்தனாரைக் காணவில்லை! இதுபற்றி மகாதேவன் மனம் நொந்து எழுதுகிறார்:

நந்தனார் சிலையுருவில் நின்றிருந்த இடம் கால்களால் மிதிபடும் இடமாகிவிட்டிருந்தது."

***

சிலைகளிலும் தீண்டமை பார்த்து அதை அகற்றிய தில்லைவால் அந்தணர்களின் செயலை என்னவென்று சொல்வது, அவர்களும் தமிழ்பேசுகிறார்கள், தமிழர்கள் அனைவரையும் வேறுபாடு பார்க்காமல் விசி திருமாவளவனுக்கும் மாலை மரியாதை செய்தார்கள் என்று சொல்வதெல்லாம் சப்பைக்கட்டுகள் தானே. திருமாவளவனுக்கு மாலை மரியாதைச் செய்தது அவருக்கு பின்னால் நிற்கும் மக்கள் சக்தியை நினைத்தும், பெரும்பான்மை தலித் பெருமக்கள் வாழும் தில்லையில் அவ்வாறு செய்யவில்லை பிழைப்புக்கே வேட்டு என்ற பயம் தானே காரணம் ?

ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு தில்லைக் கூத்தனுக்கு தமிழை மீட்டுத்தந்தார் ஒரு ஓதுவார் ஆறுமுகசாமி, அந்த போராட்டத்தில் தில்லைவால் அந்தணர்களின் தாக்குதலுக்கு ஆளாகி ஒரு கண்ணை இழந்து கண்ணப்பநாயனாராக ஆகியும், உறுதி குறையாமல் இறுதியில் அவரது உண்மையான இறைவேட்கை அவருக்கும் சிவனுக்கும் வெற்றியைத் தேடித்தந்தது, சிற்றம்பலமும் தமிழும் சங்கமம் கொள்ள வைத்தது அவரது தொடர் போராட்டம். நந்தன் சிலையாக எங்காவது மறைவாக திருமுறைகளைப் போல் மறைத்துவைக்கட்டு இருக்கிறானா ? அல்லது எதோ ஒரு தில்லைவால் அந்தணரின் வாயில் படிக்கட்டுக்கு கீழ் கால்மிதியில் நசுங்குன்றானா ? தில்லையம்பலனுக்கே வெளிச்சம்.

சைவ சமயத்தில் மட்டும் தான் தீண்டப்படாத வகுப்பினன் என்று நந்தன் ஒதுக்கப்பட்டது ?ஆழ்வார் சிலைகள் கூட பெருமாள் அருகில் நிற்பதற்கு மறுக்க்கப்பட நிகழ்வுகள் வைணத்திலும் நடந்தேறி இருக்கிறது.

நந்தனார் சிலை உள்ளே அதே இடத்தில் அமைக்கப்பட வேண்டும். தில்லையில் மீண்டும் சிலைத்தீண்டாமைக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தப்படவேண்டும். வரட்டு ஆன்மிகம் பேசினால் மட்டும் போதுமா? நாத்திகனுக்கு கவலை வேண்டாம் என்று சொல்லும் ஆத்திகர்கள், நாத்திகன் துணை இல்லாமல் இதை சாதிப்பார்களா ?


--
அன்புடன்,

கோவி.கண்ணன்
Blogger Websites :
http://govikannan.blogspot.com
http://kaalangkal.blogspot.com